News

தெலுங்கில் வசூல் சாதனை படைத்த விரூபாஷா தமிழ் மொழியில் வெளியாகிறது !

Published

on

அறிமுக இயக்குநர் கார்த்திக் தண்டு இயக்கத்தில் சாய் தரம் தேஜ், சம்யுக்தா, சுனில் ஆகியோரின் நடிப்பில் கடந்த ஏப்ரல் மாதம் தெலுங்கில் வெளியான திரைப்படம் விரூபாஷா கிட்டத்தட்ட 20 கோடி செலவில் உருவான இந்த திரைப்படம் சுமார் 80 கோடி வரைக்கும் தெலுங்கில் வசூலை பெற்று மிகப்பெரிய வெற்றியை பெற்றது.

தெலுங்கு மொழியில் இதற்கு முன்னதாக வெளியான அம்மன், அருந்ததி படங்கள் தமிழ் மொழியில் டப்பிங் செய்து மிகப்பெரிய வெற்றியை பெற்றது. அந்த வரிசையில் இந்த விரூபாஷா திரைப்படமும் உருவாகியுள்ளது. மாயாஜால தந்திரம் நிறைந்த இப்படத்தின் கதைக்களம் 1991-ம் ஆண்டுகளில் நடைப்பதாக கதைக்களம் அமைக்கப்பட்டுள்ளது.

தெலுங்கில் ரசிகர்களால் பெரிதாக கொண்டாடப்பட்ட இப்படம் தமிழ் மொழியிலும் வரவேற்றை பெறும் என்று இப்படத்தை தமிழில் ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம் வெளியிடுகிறது. தமிழ் வசனங்களை பிரபாகர் என்பவர் எழுதியுள்ளார். இப்படம் நாளை திரையரங்குகளில் தமிழ் மொழியில் வெளியாகிறது. தெலுங்கில் கிடைத்த அந்த மிகப்பெரிய வெற்றி தமிழ் மொழியில் கிடைக்குமா இல்லையா என்பது நாளை தெரிந்து விடும்.

Trending

Exit mobile version