Connect with us
 

Reviews

லத்தி – விமர்சனம் !

Published

on

Movie Details

இயக்குநர் வினோத் குமார் இயக்கத்தில் விஷால், சுனைனா, ரமனா நடிப்பில் திரையரங்குகளில் வெளியாகியுள்ள திரைப்படம் லத்தி.

விஷால், மனைவி சுனைனா ஒரு மகன் என தன் வாழ்க்கையை மிக சாதரணமாக வாழ்ந்து வருகிறார் கான்ஸ்டபிளான விஷால். ஏதோ ஒரு காரணத்துக்காக ஒரு வருடம் சன்பென்ட் ஆகி இருக்கும் விஷால் அந்த வேலையில் மறுபடியும் சேருவதற்கு பல உயர் அதிகாரிகளின் சிபாரிசை நாட ஒரு கட்டத்தில் மிகப்பெரிய உயர் அதிகாரியான பிரபு மூலம் விஷாலுக்கு அந்த வேலை மறுபடியும் கிடைக்கிறது.

ஒரு தவறு செய்யும் மிகப்பெரிய தாதாவின் மகனான ரமணாவை முகத்தை மூடி விட்டு தன் லத்தியால் வெளுத்து வாங்குகிறார் விஷால். அடித்து முடித்து விட்டு குப்பை கிடங்கில் நிர்வானமாக தூக்கி எறிந்து விட்டு செல்கிறார். முகத்தை மூடினால் தன்னை அடித்தவன் விஷால் என்பதை எப்படியோ தெரிந்து கொள்கிறார் ரமணா. அதன் பின்னர் விஷால்தான் என்பதை ஒரு வழியாக உறுதியும் செய்கிறார். அதன் பின்னர் விஷால் குடும்பத்தை பழி வாங்க வேண்டும் என நினைக்கும் ரமணாவிடமிருந்து தன் குடும்பத்தை சாதாரண ஒரு கான்ஸ்டபில் விஷால் எப்படி காப்பாற்றினார் என்பதே படத்தின் மீதிக்கதை.

படத்தின் முதல் பாதி எப்படி ஆரம்பித்தது எப்படி முடிந்தது என்றே தெரியவில்லை அந்த அளவுக்கு வேகமாகவும் விறுவிறுப்புடனும் திரைக்கதை நகத்தியுள்ளார் இயக்குநர். ஒரு அதிரடியான பஞ்ச் டயலாக் பேசும் ஹீரோவாக இல்லாமல் விஷால் நடித்திருப்பது இதுதான் முதல் முறை. ஒரு இயல்பான போலீஸ் கதையாகவும் ஒரு கான்ஸ்டபிள் முருகானந்தம் கதாப்பாத்திரத்திற்கு ஏற்ற போல மிகவும் சிறப்பாக நடித்துள்ளார் விஷால்.

விஷாலின் மனைவியாக வரும் சுனைனா அன்பான மனைவியாக சிறிது நேரம் வந்தாலும் ரசிக்க வைக்கிறார். வில்லன்களாக வரும் சன்னி அவரின் மகன் ரமணா. சென்னையின் மிகப்பெரிய தாதா என்ற திமிரில் மிரட்டுகிறார். இவரின் மகனாக கொடூர வில்லனாக வரும் ரமணா மிரட்டியிருக்கிறார். விஷாலின் நடிப்புக்கு போட்டி போட்டு நடித்துள்ளார். மற்றபடி வில்லனின் கையாளாக வரும் வினோத் சாகர், போலீஸ் அதிகாரிகளாக வரும் பிரபு, தலைவாசல் விஜய் இருவரும் சில நிமிடங்கள் வந்து செல்கிறார்கள். விஷாலின் அன்பான மகனாக வரும் லிரிஷ் ராகஷ் ரசிக்க வைக்கிறார்.

இடைவேளைக்கு பின்னர் 200 நபர்களையாவது நடிக்கிறார் விஷால் அதுவும் சும்ம இல்லை வில்லன்கள் எல்லாம் பறந்து பறந்து மாடியிலிருந்து விழுகிறார்கள் கண்டிப்பாக அதற்காக சண்டைப்பயிற்சியாளர் பீட்டர் ஹெய்னை பாராட்டியே ஆக வேண்டும்.

யுவனின் பாடல்கள் எதுவுமே ரசிக்க வைக்கவில்லை பின்னணி இசையில் மிரட்டுகிறார். பாலசுப்பிரமணியம், பாலகிருஷ்ணா இருவரின் ஒளிப்பதிவு, என்.பி ஶ்ரீகாந்த் படத்தொகுப்பு என படத்தின் பலம்.

இடைவேளைக்கு முன் படம் நகர்வதே தெரியவில்லை அதே வேகம் விறுவிறுப்பு படம் முழுவதும் இருந்திருந்தால் கண்டிப்பாக இதை விட அதிகமாக கொண்டாடி இருக்கலாம்.
Laththi Review By CineTime

[wp-review id=”44873″]