Connect with us
 

News

தளபதி 66 படத்தின் வில்லனாக விவேக் ஓபேராய் !

Published

on

தளபதி விஜய் ‘மாஸ்டர்’ படத்துக்கு பின்னர் நெல்சன் திலீப்குமார் இயக்கிய ‘பீஸ்ட்’ படத்தில் நடித்து முடித்துள்ளார். இதில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார். இயக்குநர் செல்வராகவனும் முக்கியமான கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். அடுத்த மாதம் இப்படம் திரைக்கு வரவுள்ளது.

இப்படத்தை தொடர்ந்து விஜய் நடிக்கும் 66-வது படத்தை பிரபல தெலுங்கு இயக்குநர் வம்சி இயக்கவுள்ளார். தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் உருவாகிறது இப்படம் தற்போது இப்படத்தின் ஆரம்பக்கட்ட பணிகள் நடந்து வருகின்றன.

இப்படத்தின் வில்லனாக பிரகாஷ்ராஜ், நானி நடிக்கவிருக்கிறார்கள் என்ற பெயர் அடிப்பட்டன. இந்த நிலையில் தற்போது இப்படத்தில் விஜய்க்கு வில்லனாக விவேக் ஓபேராய் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

விவேக் ஓபராய் ஏற்கனவே அஜித் குமார் வெளியான விவேகம் படத்தில் வில்லனாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.