News

படத்தின் டைட்டிலுக்கு நியாயம் செய்ய முயற்சித்து இருக்கிறோம் – உதயநிதி ஸ்டாலின் !

Published

on

தயாரிப்பாளர் போனி கபூர் வழங்கும், ZEE STUDIOS & BAYVIEW PROJECTS உடன் ROMEO PICTURES இணைந்து தயாரிக்க, அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில், உதயநிதி ஸ்டாலின் நடித்துள்ள திரைப்படம் “நெஞ்சுக்கு நீதி”. சமூக அவலத்தை சாடும் ஒரு அழுத்தமான திரைப்படமாக இப்படம் உருவாகியுள்ளது. விரைவில் திரையரங்குகளில் வெளியாகவுள்ள இப்படத்தின் ஆடியோ மற்றும் டிரெயலர் வெளியீட்டு விழா இன்று திரைபிரபலங்கள்படக்குழுவினர் கலந்து கொள்ள கோலகலமாக நடைபெற்றது.

நடிகர் உதயநிதி ஸ்டாலின் கூறியதாவது :- முதல் நன்றி தாத்தா கலைஞருக்கு அவர் தந்தது தான் இந்த டைட்டில். படத்தின் டைட்டிலுக்கு நியாயம் செய்ய முயற்சித்து இருக்கிறோம். போனிகபூர் என்னை அழைத்து ரீமேக் பண்ணலாம் என்று கூறியபோது., இப்படத்திற்கு யாரை இயக்குனராக வைத்து பண்ணலாம் என சந்தேகம் இருந்தது. யாரும் முன்வரவில்லை. கனா படத்தை பார்த்துவிட்டு, அருணை கூப்பிட்ட போது, அருண் ஒத்துகொண்டார். நான் நெஞ்சுக்கு நீதி டைட்டில் உரிமை பற்றி, அப்பாவிடம் கேட்டபோது, பார்த்து பண்ணுங்க என கூறினார். படம் எடுக்கும் போது, கொரோனா பெரிய தடையாக இருந்தது. அருண் மனைவி மற்றும் படத்தில் பணியாற்றி கொரோனாவில் உயிரிழந்தவர்களுக்கு இந்த படத்தின் வெற்றி சமர்பணம். அருண் தமிழ் சினிமாவில் பெரிய இடத்திற்கு செல்வார். நடன இயக்குனர், கலை இயக்குனர், ஒளிப்பதிவாளர் தினேஷ் அவர்களுக்கு நன்றி. இந்தப்படம் ஒத்துகொண்ட போது பயமாக இருந்தது, எப்படி போலீஸாக நடிக்க போகிறேன் என்ற பயம் இருந்தது. நான் போலீஸாக திரையில் சிறப்பாக வந்ததற்கு பெரிய காரணம் தினேஷ். ஷிவானி ராஜசேகர், குறிஞ்சி கதாபாத்திரமாக வாழ்ந்திருக்கிறார். பாடல்வரிகள் பவர்புல்லாக இருக்கும். இந்த படத்திற்கு ரோமியோ பிக்சர்ஸ் ராகுல் பெரிய பலம். எல்லோருக்கும் நன்றி. படம் சமூகநீதி பேசும் படம், இந்த சமயத்தில் தேவையான ஒரு படம், உங்களுக்கு நிச்சயம் பிடிக்கு. நன்றி.

இப்படத்தில் உதயநிதி ஸ்டாலின், ஆரி, தன்யா ரவிச்சந்திரன், ஷிவானி ராஜசேகர், யாமினி சந்தர், சுரேஷ் சக்கரவர்த்தி, இளவரசன், மயில்சாமி, அப்துல் லீ, ராட்சசன் சரவணன் மற்றும் பலர் இணைந்து நடித்துள்ளனர்.

இப்படத்தின் கதையை அனுபவ் சின்ஹா, எழுதியுள்ளார். ஒளிப்பதிவு தினேஷ் கிருஷ்ணன். B செய்துள்ளார். இசையமைப்பாளர் திபு நினன் தாமஸ் இசையமைத்துள்ளார், எடிட்டிங் ரூபன், கலை இயக்கம் வினோத் ராஜ்குமார் மற்றும் லால்குடி N இளையராஜா, ஸ்டன்னர் சாம் ஸ்டண்ட், C H பாலு ஸ்டில்ஸ், பாடல்கள் யுகபாரதி, அருண்ராஜா காமராஜ் மற்றும் தமிழரசன் பச்சமுத்து வசனம் எழுதியுள்ளனர், லீலாவதி நடன இயக்குனர் , அனு வர்தன் ஆடை வடிவமைப்பாளர், ஒலி வடிவமைப்பு சுரேன் மற்றும் அழகியகூத்தன், VFX ஹரிஹர சுதன் (Lorven Studio) ஆகியோர் பணியாற்றியுள்ளனர்.

தயாரிப்பு நிர்வாகி S.P. சொக்கலிங்கம், காஸ்ட்யூமர் K.செல்வம், ஹேர் மற்றும் மேக்கப் சக்திவேல், விளம்பர வடிவமைப்புகள் கோபி பிரசன்னா ஆகியோர் பணியாற்றியுள்ளனர்.

Trending

Exit mobile version