News

அறிவழகன் இயக்கத்தில் அருண் விஜய் நடிக்கும் வெப் தொடர் !

Published

on

ஒரு நடிகராக தன் கடின உழைப்பால் சினிமாவில் தனக்கென்று ஒரு இடம் பிடித்துள்ள நடிகர்களின் கண்டிப்பாக அருண் விஜய்க்கு மிகப்பெரிய இடம் உண்டு. கெளம் மேனன் இயக்கத்தில் வெளிவந்த என்னை அறிந்தால் படத்தில் வில்லனாக நடித்ததன் மூலம் மேலும் பல கோடி ரசிகர்களை தன் வசம் கொண்டு வந்தார். அப்படம் அவர் சினிமா வாழ்க்கையில் மிகப்பெரிய திருப்புமுணை படமாக அமைந்தது.

அதனை தொடர்ந்து இயக்குநர் அறிவழகன் இயக்கத்தில் நடித்த குற்றம் 23 அருண் விஜய்க்கு மிகப்பெரிய வெற்றியை கொடுத்தது. தற்போது தமிழ் ராக்கர்ஸை மையமாக வைத்து அறிவழகன் ஒரு படத்தை இயக்க அதில் அருண் விஜய் நடிக்கவுள்ளாராம்.

கடந்த பல ஆண்டுகளாக சினிமா உலகை ஆட்டிப்படைத்து வரும் தமிழ் ராக்கர்ஸ் என்ற திருட்டு இணையதளத்தில் வெளியாகும் அனைத்து திரைப்படங்களும் அடுத்த நொடியே வெளியாகிவிடும். இதை தடுக்க எடுத்த அனைத்து முயற்சிகளும் பலன் அளிக்கவில்லை. தொடர்ந்து சினிமாத்துறை சவாலாகவே செயல்பட்டு வரும் தமிழ் ராக்கர்ஸ் இன்று வரை பிடிக்க முடியவில்லை.

தமிழ் ராக்கர்ஸ் இணையதளத்தை மையமாக வைத்தே இந்த வெப் தொடரை இயக்கவிருக்கிறார் இயக்குநர் அறிவழகன். இது நேரடியாக ஓ.டி.டி தளத்தில் வெளியிட உள்ளதாகவும் கூறப்படுகிறது.

Trending

Exit mobile version