News

விஜய் தொலைக்காட்சியிலிருந்து விலகிய புகழ் காரணம் என்ன?

Published

on

குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சி மூலம் உலக புகழ் பெற்றவர் புகழ். இதனை தொடர்ந்து அவருக்கு பல சினிமா வாய்ப்புகள் வர ஆரம்பித்தது. அஜித் குமார் நடிக்கும் வலிமை படத்தில் நடித்திருக்கிறார். இதனை தொடர்ந்து புகழ் கைவசம் 10 மேற்ப்பட்ட திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் புகழ் விஜய் டிவி தொலைக்காட்டியில் கலந்து கொண்டு வந்த காமெடி ராகா கலக்கல் ராணி என்ற நிகழ்ச்சியிலிருந்து விலகினார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ஒரு வீடியோவில் கூறியதாவது:_எல்லோருக்கும் வணக்கம். எப்படி இருக்கீங்க? கண்டிப்பாக எல்லோரும் நன்றாக இருப்பீர்கள். உங்களுடைய ஆதரவினால் எனக்கு ஒரு சில படங்களில் ஒப்பந்தமாகியுள்ளன.

அதனால் என்னால் ‘காமெடி ராஜா கலக்கல் ராணி’ நிகழ்ச்சியில் கலந்து கொள்ள முடியவில்லை. சீக்கிரமாக மீண்டும் வந்து கலந்து கொள்வேன். இது ஒரு சின்ன இடைவெளி தான். படம் முடிந்தவுடன் வந்துவிடுவேன். சீக்கிரமாகவே சந்திக்கிறேன்.’ எனக் கூறியுள்ளார்.

Trending

Exit mobile version