News

தனுஷ் – செல்வராகவன் படத்தின் தலைப்பு மாற்றம்?

Published

on

தமிழ் சினிமாவில் வித்தியாசமான இயக்குநர்கள் சிலரில் செல்வராகவனும் ஒருவர். இவர் தற்போது தனுஷை வைத்து காதல் கொண்டேன், புதுப்பேட்டை, மயக்கம் என்ன போன்ற படங்களை இயக்கிவிருந்தார்.இப்படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

இவர்கள் இருவரும் 10 ஆண்டுகளுக்கு பின்னர் மீண்டும் இணைந்துள்ள திரைப்படம் நானே வருவேன். கலைப்புலி எஸ்.தாணுவின் வி.கிரியேசன்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கவுள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு ஆகஸ்ட் மாதம் ஆரம்பிக்கவுள்ளது.

இந்நிலையில் நானே வருவேன் படத்தின் தலைப்பு மாற்றபட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.விரைவில் புதிய தலைப்பை தயாரிப்பாளார் தாணு வெளியிடுவார் எனவும் அதோடு தலைப்பு மாற்றத்துக்கான காரணத்தையும் அவர் தெரிவிப்பார் என்றும் கூறப்படுகிறது.

Trending

Exit mobile version