News

இந்தியன் 2 திரைப்படம் கைவிடப்படும் அபாயம் காரணம் என்ன?

Published

on

படப்பிடிப்பில் ஏற்பட்ட விபத்தினால் கமல்ஹாசனின் இந்தியன் 2 படப்பிடிப்பு இன்று வரை தொடங்கப்படாமல் உள்ளது. இயக்குநர் ஷங்கர் தெலுங்கில் ராம்சரண் நடிக்கும் புதிய படத்தை இயக்க சென்றுள்ளார்.

இந்தியன் 2 படப்பிடிப்பை முடிக்காமல் வேறு படங்களை ஷங்கர் இயக்க தடை விதிக்கும்படி பட நிறுவனம் நீதிமன்றத்தை நாடியது அதன் பின்னர் ஷங்கருக்கு இந்தியன் 2 பட தயாரிப்பு நிறுவனத்துக்கும் இடையே நடந்த பேச்சுவார்த்தையில் சமரம் ஏற்பட்டது.

தெலுங்கு படத்தை முடித்து விட்டு இந்தியன் 2 படப்பிடிப்பை ஷங்கர் தொடங்கவுள்ளார் என்று கூறப்பட்டது. கமல்ஹாசனும் விக்ரம் படப்பிடிப்பு மற்றும் பிக்பாஸ் நிகழ்ச்சிகளில் பிஸியாகவுள்ளார். இந்த நிலையில் இந்தியன்2 படத்துக்கு மிதி உள்ள காட்சிகளை படமாக்க செலவாகும் புதிய பட்ஜெட் விவரங்களை தயாரிப்பு தரப்பிடம் ஷங்கர் தெரிவித்ததாகவும் அதை ஏற்றுக்கொண்ட தயாரிப்பு தரப்பு குறிப்பிட்ட காலத்துக்குள் படப்பிடிப்பை முடிக்கும்படி ஒம்பந்தம் போட்டு அதில் கையெழுத்து போடும்படி ஷங்கரிடம் கேட்டதாகவும் ஆனால் இன்று வரை ஷங்கர் அதில் கையெழுத்து போடவில்லை என்றும் இதன் காரணமாக இந்தியன் 2 படத்தை கைவிடும் சூழ்நிலை ஏற்பட்டுவுள்ளதாக இணைய தளங்களில் செய்திகள் வெளியானது.

இது ரசிகர்களுக்கு மிகப்பெரிய அதிர்ச்சியை கொடுத்தது. இதுகுறித்து தயாரிப்பு நிறுவனம் தரப்பில் விசாரித்த போது இணைய தளத்தில் வெளியாகும் செய்திகள் உண்மையல்ல. இந்தியன் 2 படம் கைவிடப்படவில்லை என்று மறுத்துள்ளார்.

Trending

Exit mobile version