News
நயன்தாரா – விக்னேஷ் சிவன் திருமணம் எப்போது?

நயன்தாராவுடன் திருமணம் எப்போது என்பது குறித்தி இன்ஸ்டாகிராமில் விக்னேஷ் சிவன் மனம் திறந்துள்ளார்.தமிழ் சினிமா உலகின் பரபரப்பான காதல் ஜோடியாக நயன்தாரா – விக்னேஷ் சிவன் வலம் வருகிறார்கள்.
இயக்குநர் விக்னேஷ் சிவன் நேற்று இன்ஸ்டாகிராமில் ரசிகர்களுடன் சண்டே கேள்வி நேரம்.. என்ற கேப்ஷனில் சாட் செய்தார். அப்போது ரசிகர் ஒருவர், எப்பத்தான் நயன்தாராவ கல்யாணம் பண்ணிக்க போறீங்க. ஆவலுடன் காத்திருக்கேன்” எனக் கேள்வி கேட்டார்.
அதற்கு பதிலளித்த விக்னேஷ் சிவன், ரொம்ப செலவாகும் ப்ரோ.. கல்யாணம் மற்ற விஷயங்களுக்கு. அதனால் கல்யாணத்துக்காக காசு சேர்த்துட்டு இருக்கேன். கொரோனா முடியட்டும்னு காத்திருக்கேன்” என்றார். கொரோனா முடிந்ததும் நயன் – விக்னேஷ் சிவனுக்கு டும் டும் டும்மான்னு.. நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.