Connect with us
 

News

வலிமை படத்தின் விசில் தீம் மியூசிக் வெளியீடு கொண்டாட்டத்தில் ரசிகர்கள் !

Published

on

எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் போனி கபூர் தயாரிப்பில் உருவாகி வரும் திரைப்படம் வலிமை. அஜித்துக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை ஹூமா குரேசி நடிக்க தெலுங்கு நடிகர் கார்த்திகேய வில்லன் வேடத்தில் நடித்துள்ளார்.

கொரோனா ஊரடங்கு காரணமாக 10 மாதத்தில் முடிக்க வேண்டிய திரைப்படம் 2 ஆண்டுகளாக நடைபெற்று வந்தது இப்படம் வரும் பொங்கள் பண்டிகையை முன்னிட்டு திரைக்கு வரவிருக்கிறது.

அதிரடி ஆக்‌ஷன் படமாக உருவாகியுள்ள இப்படத்தில் மிரட்டும் பைக் சேஸிங் காட்சிகள் ஹாலிவுட் தரத்தில் இருக்கும் என்று கூறப்படுகிறது. இப்படத்தில் அஜித் ஒரு அதிரடி போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார்.

இப்படத்தின் மேக்கிங் வீடியோ கடந்த வாரம் வெளியாகி அஜித் ரசிகர்களை கொண்டாட வைத்தது. அதோடு மட்டுமில்லாமல் யுவர் ஷங்கர் ராஜா இசையமைக்கும் இப்படத்திலிருந்து இரண்டு பாடல்கள் முன்னோட்ட வீடியோ ஆகியவையும் வெளியாகி ரசிகர்களை பெரியளவில் கொண்டாட வைத்தது.

இந்த நிலையில் தற்போது வலிமை படத்தின் விசில் தீம் இசை வெளியிடப்படவுள்ளது. அஜித் – யுவன் படமென்றாலெ தீம் மியூசிக் மிரட்டலாகவேருக்கும் குறிப்பாக இவர்களின் கூட்டணியில் வெளியான பில்லா படம் மங்காத்தா படமாகட்டும் இந்த இரண்டு படத்திலுமே தீம் மியூசிக் மிரட்டலாக இருக்கும் அந்த ஒன்று இதில் மிஸ்ஸிங் என்றே சொல்ல வேண்டும். இருந்தாலும் அஜித் ரசிகர்கள் சும்மா விடுவார்களா அதையும் கொண்டாடி வருகிறார்கள்.