News

சாந்தனுவுக்கு நடன பயிற்சி கொடுப்பாரா ஆர்யா?

Published

on

பாக்யராஜ் – பூர்ணிமா தம்பதிகளின் வாரிசு சாந்தனு. திறமையாக நடனமாடகூடிய ஒரு நடிகர். இவருடைய திறமைக்கு முக்கியத்துவம் கொடுத்து முருங்கைக்காய் சிப்ஸ் என்ற உருவாகி வருகிறது.

இந்த படத்தின் இரண்டாவது வீடியோ பாடல் சில தினங்களுக்கு முன்னர் வெளியானது. அதில் சாந்தனு நடனம் அனைத்து தரப்பு மக்களுக்கும் மிகவும் பிடித்து விட்டதாம். இதனால் சாந்தனுவிற்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

இதை பற்றி நடிகர் ஆர்யா தனது டுவிட்டர் பக்கத்தில் குறும்பாக ஒரு பதிவு வெளியிட்டுள்ளார் அதில் சாந்தனு தனது நடன அசைவுகளை மறக்காமல் ஆடியதாகவும் வாழ்த்துக்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.

இதற்கு சாந்தனுவும் ஆர்யாவுக்கு நன்று தெரிவித்திருக்கிறார். அதோடு மட்டுமில்லாமல் ஆர்யாவின் வீட்டுக்கு சென்று பிசிறு இல்லாமல் நடனம் ஆடுவது எப்படி என்று கற்றுக்கொள்வபோவதாகவும் கூறியிருக்கிறார் சாந்தனு. கற்றுக்கொடுப்பாரா ஆர்யா?

Trending

Exit mobile version