News

பீஸ்ட் படத்தில் விஜய்யுடன் நடிப்பாரா ஷாருக்கான்?

Published

on

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் தளபதி நடித்து வரும் பீஸ்ட் படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு சென்னையில் அடுத்த வாரம் முதல் ஆரம்பிக்கவுள்ளதாம். இதன் முதல் கட்ட படப்பிடிப்பு கொரோனா இரண்டாம் அலையின் ஊரடங்குக்கு முன்னர் ஜார்ஜியாவில் நடத்தி முடித்தனர்.

பீஸ்ட் படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்து வருகிறார். சென்னையில் நடக்கும் இரண்டாம் கட்ட படப்பிடிப்பில் மிகப்பெரிய அரங்கம் அமைத்து இருவருக்கும் ஒரு பாடல் காட்சியை படமாக்கவுள்ளனர் படக்குழு. அதற்கான நடன பயிற்சியில் ஈடுபட்ட பூஜா ஹெக்டே புகைப்படங்கள் இரண்டு தினங்களுக்கு முன்னர் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வந்தது.

இந்த நிலையில் விஜய்யின் இந்த பீஸ்ட் படத்தில் பாலிவுட் சூப்பர் ஸ்டார் நடிகர் ஷாருக்கான் கெஸ்ட் ரோலில் நடிக்கவுள்ளதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது. இது எந்த அளவுக்கு உண்மையென்றும் தெரியவில்லை. அப்படி இந்த கூட்டணி உறுதியானால் இரண்டு சூப்பர் ஸ்டார்களும் இணைந்து நடிக்கும் முதல் படமாக இது அமையும் என்பது குறிப்பிடத்தக்கது.

Trending

Exit mobile version