News

பீஸ்ட் புரோமோ வீடியோ நாளை வெளியாகிறதா?

Published

on

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் தளபதி விஜய் நடித்த பீஸ்ட் படத்தின் படப்பிடிப்பு கடந்த சில நாட்களுக்கு முன்னர் முடிவடைந்த நிலையில் தற்போது இப்படத்தின் ப்ரோமோ வீடியோ விரைவில் வெளியாகும் என்றும் அந்த வீடியோவின் படப்பிடிப்பு சென்னையிலுள்ள ஸ்டூடியோவில் நடந்த்ததாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் நாளை பீஸ்ட் படத்தின் அந்த ஸ்பெஷல் வீடியோ வெளியாக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. நாளை மாலை 5 மணிக்கு சன் பிக்சர்ஸ் சமூக வலைதளப் பக்கத்தில் பீஸ்ட் படத்தின் சிங்கிள் பாடல் ரிலீஸ் குறித்த தகவலுடன் கூடிய ஸ்பெஷல் வீடியோ வெளியாக உள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது. இந்த செய்தி உறுதி செய்யப்பட்டால் நாளை பீஸ்ட் ரசிகர்களுக்கு செம விருந்து காத்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Trending

Exit mobile version