Connect with us
 

News

ஜூலை 15 வெளியாகிறதா வலிமை பர்ஸ்ட் லுக் போஸ்டர்?

Published

on

இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில் அஜித் குமார் நடித்து வரும் திரைப்படம் வலிமை. இன்னும் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் கூட வெளியாகவில்லை. முன்னதாக அஜித் பிறந்த தினமான மே1-ம் தேதி வெளியாகும் என்று படக்குழு அறிவித்தது. கொரோனா இரண்டாம் அலை காரணமாக அது தள்ளி போனது.

அதற்கு பின்னர் அஜித் ரசிகர்கள் வலிமை அப்டேட் வேண்டும் என்று போர்க்கொடி ஏந்தினர். போகும் இடமெல்லாம் வலிமை அப்டேட் கேட்க ஆரம்பித்தனர்.

இந்நிலையில் வலிமை படத்தின் அப்டேட் இம்மாதம் 15-ம் தேதி வெளியாகலாம் என்று கூறப்படுகிறது. ஏற்கனவே படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் மோஷன் போஸ்டர் ஆகியவை தயாராகவுள்ளதாக தகவல் பரவியது.

வலிமை படத்தை பார்க்க உள்ளோம் என்று பல கோடி அஜித் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் பதிவு செய்து வரும் நிலையில். வலிமை அப்டேட் குறித்த தகவல் ஒன்னும் ஒரு வாரத்தில் வெளியாகுமா? அவர்களின் அந்த எதிர்பார்பை பூர்த்தி செய்யுமா என்று தெரிந்து விடும்.