News
ரஜினிக்கு வில்லனாக நடிப்பாரா விக்ரம்?

ரஜினிகாந்த் நடிக்கும் புதிய படத்தில் வில்லனாக நடிப்பாரா விக்ரம்.நடிகர் ரஜினி தற்போது ஜெயிலர், லால் சலாம் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இப்படங்களை தொடர்ந்து ஜெய்பீம் படத்தின் இயக்குநர் த.செ.ஞானவேல் இயக்கத்தில் நடிக்கவுள்ளார் ரஜினிகாந்த்.
இப்படதில் ரஜினிகாந்த் போலீஸ் அதிகாரியாக நடிக்கவுள்ளாராம். இப்படத்தில் ரஜினிக்கு வில்லனாக நடிக்க நடிகர் விக்ரம் அவர்களிடம் தயாரிப்பு நிறுவனம் பேச்சு வார்த்தை நடத்தி வருகிறதாம். இப்படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனம் லைகா புரொடக்சன்ஸ் தயாரிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இப்படத்தின் கதையை கேட்ட விக்ரம் கதை மிகவும் பிடித்திருக்கிறது என்றாலும் வில்லனாக நடிக்க சற்று தயக்கம் காட்டி வருகிறாராம். வில்லனாக நடிக்க விக்ரமுக்கு இப்படத்தில் ரூ.50 கோடி வரை சம்பளம் கொடுக்க லைக்கா நிறுவனம் முன்வந்துள்ளதாம்.