News
ரைட்டர் பட இயக்குநரின் அடுத்த படத்தின் அப்டேட் !

இயக்குநர் பா.ரஞ்சித் தயாரிப்பில் சமுத்திரக்கனி நடிப்பில் பிராங்கிளின் ஜேக்கப் இயக்கத்தில் உருவான திரைப்படம் ரைட்டர். கடந்த வாரம் இப்படம் திரையரங்குகளில் வெளியாகி ஊடகங்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் நல்ல பாராட்டையும் விமர்சனத்தையும் பெற்றது.
இந்த நிலையில் பிராங்கிளின் இயக்கிய முதல் திரைப்படம் வெளியான அடுத்த நாளெ அவருக்கு புதிய ஒரு திரைப்படம் ஒப்பந்தமாகிவுள்ளதது. தமிழ் சினிமாவின் முன்னணி தயாரிப்பு நிறுவங்களில் ஒன்றான செவன்ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரிக்கும் அடுத்த படத்தை பிராங்கிளின் இயக்கவுள்ளார்.
இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு நேற்று வெளியானது. பிராங்கிளின் ஜேக்கப் இயக்கும் அடுத்த படத்தின் நடிகர் யார் என்பது இன்னும் சில நாட்களின் வெளியிடப்படும் என்று கூறப்படுகிறது.