படத்தின் நாயகனாக சமுதிரக்கனி காவல் துறையில் ரைட்டராக வேலை செய்து வருகிறார். ஒரு பிரச்சனை காரணமாக இவர் வேலை பார்த்து வந்த காவல் நிலையத்திலிருந்து சென்னை திருவல்லிக்கேணி காவல் நிலையத்திற்கு பணிமாற்றம் செய்யப்படுகிறார். அங்கி சீனியருக்கிய மரியாதை இவருக்கு கிடைக்கவில்லை பதிலுக்கு அவமானம் மட்டுமே கிடைக்கிறது. ஒரு நாள் டி.சி உத்தரவு போட பி.ஹெச்டி படிக்கும் மாணவனான ஹரியை ஒரு ஹோட்டல் அறையில் அடைத்து வைக்கிறான் சமுதிரக்கனி வேலை பார்க்கும் ஏரியா இன்ஸ்பெக்டர்.
அந்த மாணவன் ஹரி மீது ஏதோ ஒரு காரணத்துக்காக யுஎபிஏ வழக்கும் பதிவு செய்கிறார்கள். இதனை பார்த்த சமுதிரக்கனி அந்த ஹரி என்ற இளைஞனுக்கு உதவி செய்ய நினைக்கிறார். அதன் பின்னர் சமுதிரக்கனிக்கு நடந்த விபரீதம் என்ன அந்த மாணவனை சமுத்திரக்கனி காப்பாற்றினாரா இல்லையா என்பதுதான் படத்தின் மீதிக்கதை.
படத்தின் நாயகனாக வரும் சமுத்திரக்கனி ஒரு வித்தியாசமான கதாப்பாத்திரத்தில் சிறப்பான நடிப்பை கொடுத்துள்ளார். ரைட்டர் தங்கராஜா என்ற வேடத்தில் வரும் இவர் அப்படியே ஒரு ரைட்டராக தன்னை மாற்றிக்கொண்டு திரையில் வருகிறார்.
குறிப்பாக மேல் அதிகாரிகள் இவரை அடித்து அசிங்கமாக திட்டி அடித்து அவமானப்படுத்தும் போது அதை நினைத்து இவர் உருகி அழும் காட்சிகள் நம்மை கண்கலங்க வைக்கிறது.
ஆனால் அந்த அறையை தாண்டி வெளியில் வரும் போது உள்ளே எதும் நடக்காதது போல மற்றவர்களிடம் ஜாலியாக பேசுவது எல்லாம் விசில் பறக்கிறது திரையரங்கில்.
இவரின் அனுபவ நடிப்பு இப்படத்தில் கண்ணாடி போல ஒரு ஒரு காட்சிகளிலும் தெரிகிறது.
Cinetimee
படத்தின் இரண்டாம் நாயகன் ஹரிகிறுஷ்ணன் அன்புதுரை. மெட்ராஸ் படத்தில் ஜானி என்ற வேடத்தில் வருபவர். இப்படத்தில் ஒரு கல்லூரி மாணவனாக அற்புதமான நடிப்பு. இப்படி பல அப்பாவி மாணவர்கள் இன்றும் போலீஸ் கையில் சிக்கி வாழ்க்கையை தொலைகிறார்கள் என்பதை அழகாக அழுத்தமாகவும் காட்டியுள்ளார் இயக்குநர். ஹரிக்கு நடக்கும் கொடுமைகள் அவனுக்கு எதும் நடக்கக்கூடாது என்று ரசிகர்கள் பிரார்த்தனை செய்கிறார்கள் படம் பார்க்கும் அனைவரும் அதில் சோகம் நமக்கு.
படத்தில் வரும் நடிகை இனியா குதிரை ரைடராக ஆசைப்பட்டு வந்து மேலதிகாரியின் சாதி திமிரால் தன் உயிரைவிடும் பெண்ணாக இனியா. பா.ரஞ்தித் படம் அதில் இது இல்லாமல் எப்படி.
படத்தில் நாயகி என்று யாரும் இல்லை சமுத்திரக்கனிக்கு இரண்டு மனைவிகள் இரண்டாவது மனைவியாக மகேஸ்வரி. ஆனால் இதற்கு இரண்டு மனைவிகள் கதைக்கு அது தேவையில்லையோ என்று நம்மை யோசிக்க வைக்கிறது.
படத்தில் நகைச்சுவை என்று இல்லாமல் படத்தின் போக்கில் சில காமெடி காட்சிகள் சிரிக்க வைக்கிறது மலை ஆண்டனியின் காமெடி. ஹரியின் அண்ணனாக வரும் சுப்பிரமணிய சிவா தம்பி என்றால் உயிரை விடும் அளாவிற்கு பாசம் வைத்துள்ள அப்பாவி கிராமத்து அண்ணனாக நம்மை கண்கலங்க வைக்கிறார்.
போலீஸ் அதிகாரியாக வரும் கவிதாபாரதி, டி.சி. கதாப்பாதிரத்தில் வரும் கவின் ஜெய் பாபு இவர்கள் செய்யும் வேலைகள் அனைத்துமே சில போலீஸ் அதிகாரிகள் செய்யும் கேவலமான செயல்களை நமக்கு வெளிச்சம் போட்டு காட்டுகிறது.
இசையமைப்பாளர் கோவிந்த் வசந்தா இசையும் பின்னணி இசையும் உயிரோட்டம். பிரதீப் காளிராஜா ஒளிப்பதிவும் மணிகண்டன் சிவகுமாரின் படத்தொகுப்பும் படத்திற்கும் பக்கபலமாய் அமைகிறது.