News
நானே வருவேன் படத்திலிருந்து விலகிய ஒளிப்பதிவாளர் யாமினி !

செல்வராகவன் இயக்கதில் தனுஷ் நடிப்பில் கலைப்புலி எஸ்.தானு தயாரிப்பில் உருவாகி வரும் திரைப்படம் நானே வருவேன். இப்படத்திற்கு ஒளிப்பதிவாளராக பணிபுரிந்து வந்தவர் யாமினி. இவர்தான் செல்வராகவன் நடிக்கும் சாணிக்காயிதம் படத்திற்கும் ஒளிப்பதிவாளராக பணியாற்றினார்.
தற்போது திடீரென நானே வருவேன் படத்திலிர்ந்து விலகியுள்ளார். இதுபற்றி யாமினி கூறுகையில் செல்வராகவன் மற்றும் நானே வருவேன் படக்குழுவினருடன் பணிபுரிந்தது மிகச்சிறந்த அனுபவமாக இருந்தது. தவிர்க்க முடியாத சில காரணங்களால் என்னால் இந்த படத்தில் தொடரமுடியாமல் விலகுகிறேன். படக்குழுவினருக்கும் உங்கள் ஆதரவிற்கும் மிக்க நன்றி என்று கூறினார்.