News
விபத்து நடந்தது எப்படி யாஷிகா ஆனந்த் விளக்கம் !
நடிகை யாஷிகா ஆனந்த் கிழக்கு கடற்கரை சாலையில் தனது தோழி வள்ளிச்செட்டி பவனி மேலும் 2 ஆண் நண்பர்களுடன் காரில் சென்ற போது விபத்து ஏற்பட்டது. இதில் வள்ளிச்செட்டி பவனி சம்பவ இடத்திலெயே உயிரிழந்தார். யாஷிகாவுக்கு எலும்பு முறிவு ஏற்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த யாஷிகா நேற்று முந்தினர் சாதரன சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டார். அதன் பின்னர் சிபத்து பற்றி அவர் கூறியதாவரு:-
பவணி எனக்கு 6 வருட நெருங்க்கிய தோழி இங்கு மாடலிங் செய்து கொண்டிருந்தார் பின்னர் அதிலிருந்து விலகி வெளி நாட்டில் வேலை பார்த்தார். பெற்றோரை பார்ப்பதற்காக ஐதராபாத் வந்த அவர் என்னை சந்திக்க சென்னை வந்தார். ஜூலை 24-ம் தேதி நாங்கள் இரவு சாப்பிட்டு விட்டு ஒரு 11 மணியளவில் சென்னை திரும்பியபோது இந்த கோர விபத்து ஏற்பட்டது. காரை நான்தான் ஓட்டினேன். கண்டிப்பாக நான் காரை வேகமாக ஓட்டவில்லை. சாலை இருட்டாக இருந்ததால் துரதிர்ஷ்டவசமாக சாலையின் நடுவே இருந்த தடுப்பில் காரை நான் மோதிவிட்டேன்.
மோதியா வேகத்தில் கார் தலைகுப்பற கவிழ்ந்து மூன்று தடவை உருண்டது. எனக்கு அருகில் இருந்த பவனி சீட் பெல்ட் அணியாமல் காற்று வாங்க ஜன்னல் கண்ணாடியை திறந்து வைத்திருந்தார். விபத்து ஏற்பட்டதும் ஜன்னலுக்கு வெளியே போய் விழுதார். அவரது தலையில் பலத்த அடிபட்டது. மற்ற மூன்று பேரும் காருக்கு உள்ளேதான் இருந்தோம்.
கார் கதவு பூட்டியிருந்ததால் எங்களால் வெளிவரமுடியவில்லை. பிறகு கண்ணாடியை உடைத்து வெளியே வந்தோம். சில நிமிடங்களில் கூட்டம் கூடியது என்னால் எழுந்து நிற்கவே முடியவில்லை. அனைவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டோம். நான் குணமடைந்த பிறகே பவனி இறந்த தகவலை சொன்னார்கள். நான் அன்றைய தினம் குடிக்கவில்லை. எந்த விதமான போதை பொருளையும் பயன்படுத்தவில்லை. எதிர்பாராமல் நடந்த விபத்து அது. அதற்கு முழு பொறுப்பும் நாந்தான் குற்ற உணர்ச்சியோடு இனி வாழ வேண்டும் நான் பிழைத்திருக்கக்கூடாது என்றும் யாஷிகா அழுகையுடன் கூறினார்.