News
யாஷிகா ஆனந்த் காதல் செய்திகள் எல்லாமே வதந்தி – யாஷிகாவின் அம்மா !

நடிகர் அஜித் மனைவி ஷாலினி அண்ணன் ரிச்சர்ட் ரிஷி நடிகை யாஷிகா ஆனந்த் இருவரும் காதலிப்பதாக கடந்த சில நாட்களாக செய்திகள் பரவி வந்தது. இதை இருவர் தரப்பிலிருந்தும் மறுப்பு செய்தி கொடுக்கவே இல்லை.
இந்த நிலையில் யாஷிகா ஆனந்தின் அம்மாவிடம் கேட்டபோது அவர் கூறியிதாவது ‘நானும் தினம்தோறும் இந்த செய்தியை சமூக வலைத்தளங்களில் பார்க்கிறேன். ரிச்சர்ட் – யாஷிகா இருவரும் இணைந்து ஒரு படத்தில் நடித்து வருகிறார்கள்.
அந்த படத்தின் படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை இருவரும் பகிர்ந்து வருகிறார்கள். அதை வைத்து இவர்கள் எல்லாம் ஏதோ ஏதோ எழுதுகின்றனர். ஆனால் அது எதுவுமே உண்மை இல்லை. அந்தப்படம் குறித்த தகவல்கள் வெளிவரும் போது தான் எல்லோரும் நம்புவார்கள்.