News
தன் உயிர் தோழி இறந்தது தெரியாமல் சிகிச்சை பெற்று வரும் யாஷிக ஆனந்த் !

நடிகை யாஷிகா ஆனந்த் கடந்த சனிக்கிழமை அன்று விருந்து விழாவில் கலந்து விட்டு நண்பர்களுடன் வீடு திரும்பினார். மாமல்லபுரம் அருகே வேகமாக கார் ஓட்டிச் சென்றதில் கார் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளாகியது. இதில் அவரின் நெருங்கிய தோழியான வள்ளிச்செட்டி பவணி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். யாஷிகாவுக்கு பலத்த காயங்களுடன் அவரின் இரண்டு ஆண் நண்பர்களுடன் தீவிர சிகிச்சை பிரிவில் தற்போது உள்ளார்.
இந்த நிலையில் தற்போது யாஷிகாவின் உடல்நிலை குறித்து அவரின் தயாரான சோனல் ஆனந்த் கூறியதாவது:- யாஷிகா தற்போது நலமுடன்வுள்ளார். கால், இடுப்பு மற்றும் வயிற்றுப் பகுதியில் பலத்த காயம் காரணமாக அவருக்கு அறுவை சிகிக்கை செய்யப்பட்டுள்ளது. இவரின் தோழி இந்த விபத்தில் இறந்தது யாஷிகாவுக்கு இன்னும் தெரியாது. பவணி குறித்து யாஷிகா நலம் விசாரித்த போது வெண்டிலேட்டர்-ல வைத்திருக்கிறார்கள் என்று கூறியுள்ளோம்.
மருத்துவர்கள் இதுகுறித்து யாஷிகாவிடம் பேச வேண்டாம் என்று கூறிவிட்டார்கள். சிகிச்சைக்கு பின் 3 மாதங்கள் ஓய்வு எடுக்க வேண்டும் என்றும் 2 மாதம் கழித்துதான் அவரால் நடக்க முடியும் என்றும் மருத்துவர்கள் கூறியுள்ளனர் என்று யாஷிகா தாயார் சோனர் ஆனந்த் தெரிவித்தார்.