News

வலிமை படத்தின் அப்டேட் கொடுத்த யுவன் ஷங்கர் ராஜா !

Published

on

நேர்கொண்ட பார்வை படத்தை அடுத்து எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடித்துவரும் திரைப்படம் வலிமை. இப்படத்தின் அப்டேட் கேட்டு ரசிகர்கள் செய்யாத குறும்பு வேலைகளே இல்லை வேண்டாத சாமியும் இல்லை.

சுமார் ஒன்றரை வருடமாக அப்டேட் கேட்டு போர்க்கொடி பிடித்து திரிகிறார்கள் அஜித் ரசிகர்கள்.

இதை பொறுக்க முடியாமல் இப்படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர் அஜித் பிறந்த தினத்தில் வலிமை படத்தின் பர்ஸ்ட் வெளியாகும் என அறிவித்திருந்தார். ஆனால் கொரோனா இரண்டாம் அலை வந்து அந்த அப்டேட்டுக்கும் வேட்டு வைத்தது. இந்த நிலையில்தான் நேற்று தளபதி விஜய்யின் பிறந்த நாளையெட்டி அவரது 65 படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டில் வெளியானது இதை பார்த்த அஜித் ரசிகர்கள் நொந்து வெந்து போனார்கள்.

இந்நிலையில் வலிமை படத்தின் இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா தற்போது வலிமை படத்தின் ஒரு சூப்பட் அப்டேட் கொடுத்துள்ளார். அதில் வலிமை படத்தில் நெஞ்சை உருக வைக்கும் அம்மா செண்டிமென்ட் பாடல் ஒன்றுள்ளதாம். அதேபோல் படத்தில் அஜித்தின் அறிமுக பாடல் மிகவும் சிறப்பாக வந்துள்ளது என்று தெரிவித்துள்ளார்.

Trending

Exit mobile version