News

ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் ’13’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது !

Published

on

‘டார்லிங்’ படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு 11 ஆண்டுகளுக்குப் பிறகு, இசையமைப்பாளரும் நடிகருமான ஜி.வி. பிரகாஷ் குமார் மீண்டும் ஒரு மிரட்டலான ஹாரர் த்ரில்லர் திரைப்படமான ’13’-ல் நடிக்கிறார்.

ஜி.வி.பிரகாஷ் – கவுதம் வாசுதேவ் மேனன் கூட்டணியில் மிரட்டும் திகில் ஹாரர் திரில்லர்.இருளுக்குள் ஒளிந்திருக்கும் மர்மத்தையும், உயிரைப் பறிக்கக் காத்திருக்கும் அமானுஷ்ய சக்திகளையும் பின்னணியாகக் கொண்டு உருவாகியுள்ள ‘13’ திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் (First Look) போஸ்டர் தற்போது அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது.

மெட்ராஸ் ஸ்டுடியோஸ் (Madras Studios) தயாரிப்பில் உருவாகும் இத்திரைப்படத்தில் இசையமைப்பாளரும் நடிகருமான ஜி.வி. பிரகாஷ் குமார் மற்றும் முன்னணி இயக்குநர்/நடிகர் கவுதம் வாசுதேவ் மேனன் இருவரும் முதன்மைப் பாத்திரங்களில் இணைந்து நடித்துள்ளனர். ‘டார்லிங்’ திரைப்படத்தின் வெற்றிக்குப் பிறகு சரியாக 11 ஆண்டுகள் கழித்து ஜி.வி. பிரகாஷ் மீண்டும் ஹாரர் திரில்லர் களத்தில் தடம் பதிக்கும் படமாக இது அமைந்துள்ளது.

“உண்மைச் சம்பவங்களின் சாயலில், அடர்ந்த காட்டின் பின்னணியில் உருவாக்கப்பட்டுள்ள கதைக்களம் இது. இருளுக்குள் மறைந்திருக்கும் ’13’ என்ற எண்ணின் மர்மமும், சாத்தானின் பிடியில் சிக்கிக் கொள்ளும் மனிதர்களின் போராட்டமும் திரையில் ஒவ்வொரு விநாடியும் பதற்றத்தை ஏற்படுத்தும். வரும் டிசம்பர் மாதம் திரையரங்குகளில் ரசிகர்களை உரைய வைக்க காத்திருக்கிறோம்.”

படத்தின் இறுதி கட்டப் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ள நிலையில், வரும் டிசம்பர் மாதம் திரையரங்குகளில் படம் வெளியாகவுள்ளது.

 

Trending

Exit mobile version