News
‘ஓம்’ திரைப்படத்தில் கம்பீரமான ஜபிஎஸ் அதிகாரியாக சாய் பல்லவி !
நடிகர் தனுஷ் தயாரிப்பில், ‘அமரன்’ திரைப்பட புகழ் இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகும் புதிய திரைப்படத்தின் சிறப்பு வீடியோ (Special Duty Video) தற்போது வெளியாகி இணையத்தில் பெருமளவில் வைரலாகி வருகிறது.
ஐபிஎஸ் அதிகாரியாக சாய் பல்லவி
இத்திரைப்படத்தில் நடிகை சாய் பல்லவி ‘நித்யா ரெட்டி IPS’ என்ற முதன்மை கதாபாத்திரத்தில் சக்திவாய்ந்த காவல்துறை அதிகாரியாக நடிக்கிறார். ஆந்திர மாநில கேடரைச் சேர்ந்த அதிகாரியாகவும், சிபிஐ (CBI) அமைப்பில் கூடுதல் எஸ்பியாகவும் (Additional SP) பணியாற்றும் தீவிரமான கதாபாத்திரத்தில் அவர் தோன்றுகிறார்.
‘ஓம்’ (OM) ஆபரேஷன் பின்னணி
ஆந்திரப் பிரதேசத்தின் இயற்கை வளமான ‘செம்மரக் கடத்தலுக்கு’ (Red Sandalwood / Red Gold) எதிரான பின்னணியில் இக்கதை அமைக்கப்பட்டுள்ளது. காடுகளைப் பாதுகாக்கும் தீவிரமான ‘ஆபரேஷன் ஓம்’ (Operation OM) என்ற ரகசியத் திட்டத்தின் இன்சிடென்ட் கமாண்டராக (Incident Commander) சாய் பல்லவி களமிறங்குகிறார்.
செம்மரக் கடத்தல் நெட்வொர்க்கை வேரறுக்கும் அதிரடி ஆக்ஷன் மற்றும் உணர்ச்சிப்பூர்வமான காட்சிகளுடன் உருவாகியுள்ள இந்த டீசர் வீடியோ ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.