News

பொங்கல் ரேஸில் அதிகாரப்பூர்வமாக களமிறங்கிய ‘வேட்டுவம்’

Published

on

இயக்குநர் பா. இரஞ்சித் தயாரித்து இயக்கியுள்ள திரைப்படம் ‘வேட்டுவம்’. ஆர்யா கதாநாயகனாக நடித்துள்ள இப்படத்தில் அட்டக்கத்தி தினேஷ், ‘சார்பட்டா’ ஷபீர், சோபிதா துலிபாலா, கலையரசன் உள்ளிட்ட பலர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஜி.வி. பிரகாஷ் குமார் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். சமீபத்தில் வெளியான ‘வேர்ல்டு ஆப் வேட்டுவம்’ வீடியோ ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது.

An apocalyptic பின்னணியில் உருவாகியுள்ள இத்திரைப்படம், அதிகாரப் போட்டி, வெவ்வேறு குழுக்களுக்கு இடையிலான மோதல்கள் மற்றும் எதிர்பார்க்காத திருப்பங்களைக் கொண்ட கதையாக அமைக்கப்பட்டுள்ளது. மேலும், தமிழர்களின் பாரம்பரியத் தற்காப்புக் கலைகளான அடிமுறை மற்றும் மல்லகம்பம் ஆகியவற்றைக் கொண்டு இதிலுள்ள சண்டைக் காட்சிகள் உருவாக்கப்பட்டுள்ளன. இதற்காகப் படத்தில் நடித்த நடிகர்கள் அனைவரும் தீவிரப் பயிற்சிகளை மேற்கொண்டு நடித்துள்ளனர்.

இந்நிலையில், இத்திரைப்படம் வரும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 5 மொழிகளில் திரையரங்குகளில் வெளியாகும் எனப் படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

பிற முன்னணி திரைப்படங்களின் பொங்கல் ரிலீஸ் குறித்த தகவல்கள் வெளியாகி வந்தாலும், வெளியீட்டுத் தேதியை முதன்முதலாக அதிகாரப்பூர்வமாக அறிவித்து 2027 பொங்கல் ரேஸில் ‘வேட்டுவம்’ முன்னிலை வகிக்கிறது.

Trending

Exit mobile version