Connect with us
 

News

சிலம்பரசனுடன் மீண்டும் ஜோடி சேர்கிறாரா அனுஷ்கா?

Published

on

கவுதம் மேனன் இயக்கத்தில் சிம்பு – திரிஷா நடிப்பில் வெளியான படம் ‘விண்ணைத்தாண்டி வருவாயா’ இப்படம் வெளியான காலகட்டத்தில் இப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாகும் என்று கூறப்பட்டது.இதையே சிம்பு – த்ரிஷா பல பேட்டிகளில் கூறி வந்தனர்.

இந்நிலையில் கார்த்திக் டயல் செய்த எண் என்ற குறும்படத்தை லாக்டவுன் நேரத்தில் கௌதம் மேனன் இயக்குனார். சிம்பு – திரிஷா அதிலும் நடித்தனர் அதை பார்த்து விட்டு ரசிகர்கள் இது விடிவி2 என்று கூறினர் ஆனால் கவுதம் மேனன் இதை மறுத்து விட்டார்.

கவுதம் மேனன் தற்போது வருண் மற்றும் ராஹே நடிக்கும் ஜோஷ்வா இமை போல் காக்க என்ற படத்தை இயக்கி வருகிறார். அதையடுத்து துருவ நட்சத்திரம் படத்தை முடிக்கிறார். இப்படத்தில் விக்ரம், ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கின்றனர். இன்னும் சில நாட்களே பணிகள் இருப்பதால் அடுத்து விடிவி2 பாகத்தை இயக்குவார் என்று கூறப்படுகிறது.

இது குறித்து கவுதம் மேனன் தரப்பில் விசாரித்த போது தற்போது விடிவி2 பாகம் எடுக்கும் திட்டம் இல்லை அதற்க்கு பதிலாக சிம்பு – அனுஷ்கா ஜோடி சேரும் ஒரு புதிய படத்த இயக்கவிருக்கிறார். இப்படத்தையும் ஐயரி கணேஷ் தயாரிக்கிறார் என்று தகவல் கிடைத்துள்ளது.