Connect with us
 

News

தி கோட் படத்தில் நடிக்க நோ சொன்ன அனுஷ்கா யெஸ் சொன்ன த்ரிஷா !

Published

on

வெங்கட் பிரபு இயக்கத்தில் தளபதி விஜய், மீனாட்சி சவுத்ரி நடிப்பில் உருவாகி வரும் தி கோட். மேலும் இப்படத்தில் பிரசாந்த், பிரபுதேவா, யோகி பாபு, சினேகா, லைலா, மோகன், ஜெயராம் மற்றும் பலர் நடித்து வருகிறார்கள்.

தளபதி விஜய் இப்படத்தில் இரு வேடங்களில் நடிக்கிறார். இதில் ஒரு விஜய்க்கு ஜோடியாக நடிக்க அனுஷ்காவிடம் பேசியதாம் படக்குழு ஆனால் அதற்கு அனுஷ்கா நோ சொல்லி விட்டாராம்.

இவர் நோ சொல்ல த்ரிஷாவிடம் பேச்சு வார்த்தை நடத்தி அவர் ஒகே சொல்லி படபிடிப்பும் சில நாட்கள் நடந்துள்ளது என்கிறது சினிமா வட்டாரம். இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு அடுத்த அப்டேட்டில் வெளியாகலாம். லியோ படத்தின் வெற்றிக்கூட்டணி விஜய் – த்ரிஷா மீண்டும் இப்படத்தில் இணைவது ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது.