Connect with us
 

News

நயன்தாராவை பின்னுக்கு தள்ளி முதலிடத்தை பிடித்த த்ரிஷா !

Published

on

பொன்னியின் செல்வன் படத்திற்கு பின்னர் லியோ படத்தில் நடித்தார் நடிகை த்ரிஷா. அதன் பின்னர் இவரின் மார்க்கெட் உச்சத்திற்கே சென்று விட்டது. த்ரிஷா தற்போது கமல்ஹாஸ் தக் லைப் படத்திலும் அஜித் குமாருடன் விடாமுயற்சி படத்திலும், சிரஞ்சீவி நடிக்கும் விஷ்வாம்பரா என்ற படத்திலும் மலையாளத்தில் மோகன்லாலுடன் ராம் என்ற படத்திலும் நிவின் பாலி நடிக்கும் ஐடென்டிட்டி படத்திலும் தற்போது நடித்து வருகிறார். இதை தவிர மீண்டும் விஜய்யுடன் இணைந்து கோட் படத்திலும் சிறப்பு தோற்றதில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் இது வரை ஒரு படத்திற்கு 6 கோடி வரை சம்பளம் வாங்கி வந்த த்ரிஷா தற்போது 12 கொடியாக உயர்த்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது வரையில் தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் என்றும் நம்பர் ஒன் நடிகையாக இருந்து வரும் நயன்தாராவை பின்னுக்கு தள்ளி முதலிடத்திற்கு வந்துள்ளார் த்ரிஷா.