Connect with us
 

News

தன் சம்பளத்தை ரூ.12 கோடியாக உயர்தினாரா நயன்தாரா?

Published

on

சமீப காலமாக தமிழ் சினிமாவிலும் சரி உலக சினிமாவிலும் சரி கதாநாயகிகளை முதன்மைப்படுத்தி பல படங்கள் வெளியாகி வருகிறது. அதில் சில பல படங்கள் வசூலை குவித்தும் வருகிறது.

இந்த வரிசையில் நயன்தாரா சினிமாவில் சுமார் 20 வருடங்களுக்கு மேலாக கதாநாயகியாக நடித்து வருகிறார். தற்போது தனக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளை மட்டும் தேர்வு செய்து நடித்து வருகிறார்.

தற்போது நயன்தாரா மண்ணாங்கட்டி என்ற படத்தில் நடித்து வருகிறார். துரை செந்தில்குமார் மற்றும் விக்னேஷ் சிவன் இயக்கும் புதிய படங்களிலும் நடிக்கவுள்ளார். இந்த நிலையில் நயன்தாரா தற்போது தன் சம்பளத்தை ரூ.12 கோடியாக உயர்த்தி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ரூ.5 கோடி வாங்கிய வந்த நயன்தாரா இவர் கதாநாயகியாக நடித்து வெளியான சில படங்கள் மாபெரும் வெற்றி பெற்றதை தொடர்ந்து ரூ.10 கோடி சம்பளம் வாங்கி வந்தார்.

இந்த நிலையில் சமீபத்தில் இயக்குநர் ஒருவர் இவரிடம் கதை சொல்ல அணுகியபோது ரூ.12 கோடி சம்பளம் கெட்டதாக தற்போது வலைதளத்தில் தகவல் பரவி வருகிறது.