Connect with us
 

News

கமலுக்கு ஜோடியாகும் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா !

Published

on

இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் இந்தியன் 2 படத்தில் நடித்து வருகிறார் கமல்ஹாசன். இப்படத்தை தொடர்ந்து இயக்குநர் எச்.வினோத் இயக்கும் தனது 234-வது படத்தில் நடிக்கவுள்ளார் கமல்ஹாசன்.

ரெட் ஜெயண்ட் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். மேலும் இப்படத்தில் நடிக்க ஜெயம் ரவி, துல்கர் சல்மான் உடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறதாம் படக்குழு.

இந்த நிலையில் தற்போது இப்படத்தில் கமலுக்கு ஜோடியாக நடிக்க லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா ஒப்பந்தம் ஆகியுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. இதற்காக நயன்தாராவிற்கு பெரும் தொகை சம்பளமாகவும் பேசப்பட்டுள்ளது.