Connect with us
 

News

மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் நடிக்கும் பைசன் காளமாடன் !

Published

on

இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் ஹீரோவாக நடிக்கவுள்ள திரைப்படத்திற்கு பைசன் என்று பெயர் வைத்துள்ளனர். இப்படத்தில் துருவ் விக்ரமுடன் அனுபமா பரமேஸ்வரன், லால், பசுபதி, கலையரசன், ரஜிஷா விஜயன், ஹரி கிருஷ்ணன், அழகம் பெருமாள் மற்றும் அருவி மதன் ஆகியோர் நடிக்கின்றனர்.

பா. ரஞ்சித்தின் நீலம் ஸ்டுடியோஸ் மற்றும் அப்ளாஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றன. பைசன் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு என்று வெளியிட்டது.

அதில் மிகப்பெரிய ஒரு காளை சிலைக்கு முன்னால் துருவ் விக்ரம் முட்டி போட்டு அமர்த்திருப்பது போன்று உள்ளது இந்த போஸ்டரில். இப்படத்தின் படப்பிடிப்பு இன்று ஆரம்பித்து உள்ளது.