Connect with us
 

News

மார்ச் 15 ஆரம்பிக்கும் மாரி செல்வராஜ் – துருவ் விக்ரம் படம் !

Published

on

இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் நடிக்கும் புதிய திரைப்படம் அறிவித்து வருடங்கள் கடந்து விட்டது. இப்படம் கபடி வீரர் மணத்தி கணேஷன் வாழ்க்கை வரலாற்று திரைப்படம் என்பதால் பல மாதங்களாக துருவ் விக்ரம் கபடி பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்.

இந்த நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பை வருகிற மார்ச் 15ம் தேதி தூத்துக்குடியில் தொடங்கவுள்ளது படக்குழு. இதன் படப்பிடிப்பு 70 முதல் 90 நாட்கள் வரை நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளது. மேலும் இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கவுள்ளார்.