Connect with us
 

News

தக் லைப் படத்தில் சிலம்பரசன் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியானது !

Published

on

மணிரத்னம் – கமல்ஹாசன் இருவரும் 37 ஆண்டுகள் கழித்து இணையும் திரைப்படம் தக் லைப். இதன் அறிமுக டீஸர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றது.

இப்படத்தில் கமலுடன் ஜெயம் ரவி, துல்கர் சல்மான், கவுதம் கார்த்திக் உள்ளிட்ட பலர் நடிக்கவுள்ளதாக அறிவிப்பு வெளியானது. இதில் ஜெயம் ரவி, துல்கர் சல்மான் இருவரும் இதிலிருந்து விலகிவிட்டனர் என்று தகவல் வெளியானது. ஆனாலும் இது இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை.

இந்த நிலையில் இப்படத்தில் நடிகர் சிம்பு நடிக்கவுள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பை டீஸர் மூலம் அறிவித்துள்ளது. அதில் எல்லையை காக்கும் பேட்ரோல் வண்டியில் புழுதி பறக்க காரில் வரும் சிம்பு கையில் துப்பாக்கியை வைத்து யாரையோ சுடுவது போன்று வீடியோவை வெளியிட்டது.