Connect with us
 

News

கமல்ஹாசன் படத்தில் இணைந்த சிலம்பரசன் !

Published

on

மணிரத்னம் இயக்கத்தில் உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகி வரும் தக் லைஃப். இப்படத்தில் கமலுடன் திரிஷா, ஜோஜு ஜார்ஜ், ஐஸ்வர்யா லட்சுமி, கவுதம் கார்த்திக் உள்ளிட்டோர் பலர் நடிக்கின்றனர். இசைப்புயல் ஏ.ஆர். ரகுமான் இப்படத்திக்கு இசையமைக்கிறார். கமல்ஹாசன் தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது. இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கியது.

இதன் முதல் கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்று முடிந்து அடுத்து செர்பியாவில் நடைபெறவுள்ளது. படப்பிடிப்பு தளத்தில் இருந்து சில புகைப்படங்களும் வெளியானது.

இப்படத்தில் கமல்ஹாசனுடன் துல்கர் சல்மான் நடிக்கவிருந்தார் ஆனால் சில காரணங்களால் விலகியதாக தகவல் வெளியானது. இந்த நிலையில் இப்படத்திலிருந்து கால்ஷீட் பிரச்சனை காரணமாக ஜெயம் ரவி அவர்களும் வெளியேறிதாக கூறப்படுகிறது.

தற்போது கிடைத்த தகவலின் படி துல்கர் சல்மானுக்கு பதிலாக நடிகர் சிலம்பரசன் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.