Connect with us
 

News

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் கூலி !

Published

on

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்கும் படத்திற்கு கூலி என பெயர் வைத்துள்ளனர் படக்குழு. இதன் டைட்டில் டீஸர் நேற்று வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

தங்க கடத்தலில் ஈடுபடும் கும்பலை ரஜினிகாந்த் அடித்து தும்சம் செய்யும் கட்சிகள் அந்த டீஸரில் இடம்பெற்றுள்ளது. இந்த சண்டைக்கு நடுவில் ரஜினிகாந்த் சில பஞ்ச் வசனங்களை பேசுகிறார்.

அவை “அப்பாவும் தாத்தாவும் வந்தார்கள் போனார்கள் தப்பென்ன சரியென்ன எபோதும் விளையாடு. அடப்பாவி என்பார்கள் தப்பாக நினைக்காத இப்பாதை போனாலும் இன்பத்தை தள்ளாத…

சோறுண்டு, சுகமுண்டு, மதுவுண்டு, மாதுவுண்டு, மணமுண்டு என்றாலே சொர்க்கத்தில் இடமுண்டு போடா என்ற வசனங்கள் ரசிகர்கள் மத்தியில் கவனம் ஈர்த்து வருகிறது.

தமிழ் மொழி மட்டுமல்ல இந்தி, கன்னடம், தெலுங்கு மொழிகளில் உருவாகி வரும் இப்படம் இன்னும் இரண்டு மாதங்களில் தொடங்கும் என கூறப்படுகிறது.

இயக்குநர் பி.வாசு இயக்கத்தில் 1995ம் ஆண்டு கூலி என்ற பெயரில் ஏற்கனவே படம் வெளியானது. இதிலும் ரஜினிகாந்த் அவர்கள்தான் ஹீரோ என்பது குறிப்பிடத்தக்கது.