Connect with us
 

News

இந்தியன் 2 படத்தின் வெளியீடு எப்போது என அதிகாரபூர்வமாக அறிவித்த தயாரிப்பு நிறுவனம் !

Published

on

உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் இயக்குநர் சங்கர் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் இந்தியன் 2. இப்படம் ஜூன் மாதம் திரையரங்குகளில் வெளியாகும் என இப்படத்தின் தயாரிப்பு நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

இந்தியன் 2 படத்தில் கமல்ஹாசனுடன், காஜல் அகர்வால், ரகுல் ப்ரீத் சிங், பிரியா பவானி சங்கர், சித்தார்த், பாபி சிம்ஹா உட்பட பலர் நடித்துள்ள இப்படத்தின் படப்பிடிப்பு முழுவதுமாக முடிவைந்து இந்தியன் 3 படத்துக்கான படப்பிடிப்பும் நிறைவடைந்துவிட்டதாக அண்மையில் அளித்த பேட்டி ஒன்றில் கமல்ஹாசன் தெரிவித்தார்.

லைகா புரொடக்ஷன்ஸ், ரெட் ஜெயண்ட் நிறுவனங்கள் இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளது. போஸ்ட் புரொடக்ஷன்ஸ் பணிகள் நடைபெற்று வருகின்றது தற்போது. இந்த நிலையில் இப்படம் ஜூன் மாதம் வெளியாகும் என லைகா நிறுவனம் அறிவித்துள்ளது.

ராக் ஸ்டார் அனிருத் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.