Connect with us
 

News

நிறைவு பெற்ற கமல்ஹாசன் நடிக்கும் தக் லைஃப் படப்பிடிப்பு !

Published

on

இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்கும் திரைப்படம் தக் லைப். இப்படத்தில் கமல் ஹாசனுடன் துல்கர் சல்மான், ஜெயம் ரவி, திரிஷா, அபிராமி, ஜஸ்வர்யா லட்சுமி, கவுதம் கார்த்திக், நாசர் உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்து வருகிறார்கள்.

இப்படத்தில் கமல் ஹாசன் ரங்கராய சக்திவேல் நாயக்கர் என்ற கதாப்பாத்திரத்தில் நடித்து வருகிறார். சமீபத்தில் இப்படத்தின் படப்பிடிப்பு ஆரம்பித்த நிலையில் இன்று இப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு முடிவடைந்துள்ளது. இதன் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு ரஷ்யாவில் நடைபெறவுள்ளது. அங்குதான் கமல்ஹாசன் நடிக்கும் அதிரடியான சண்டைக்காட்சிகளை படமாக்கவுள்ளது படக்குழு.