Connect with us
 

News

என் திறமையை ஹிந்தி இயக்குநர்கள் எப்போது புரிந்து கொள்ள போகிறார்கள் – மிருணாள் தாக்கூர் !

Published

on

பாலிவுட் நடிகை மிருணாள் தாக்கூர். ஹிந்தி மற்றும் தெலுங்கு மொழிகளில் நடித்து வந்தாலும் கடந்த வருடம் வெளியான சீதா ராமம் படத்தின் மூலம் மிகவும் பிரபலமானார்.

இந்த நிலையில் அண்மையில் இவர் அளித்த ஒரு பேட்டி ஒன்றில் ‘ நாம் அதிகமாக காதல் படங்களைத்தான் பார்த்து வளர்ந்தோம். ஆனால் அப்படிப்பட்ட திரைப்படங்கள் சினிமாவில் காணாமல் போய்விட்டது. காதல் பிடிக்கவில்லை என கூறி சிலர் காதல் படங்களை ரகசியமாக பார்த்து வருகிறார்கள்.

சீதா ராமம், ஹாய் நான்னா போன்ற காதல் படங்களில் நடித்தது எனக்கு மிகவும் மகிழ்ச்சி. ஹிந்தியிலும் இது போன்ற காதல் படங்களில் நடிக்க ஆசைப்படுகிறேன். முக்கியமாக ஷாருக்கான் உடன் இணைந்து நடிக்க மிகவும் ஆசைப்படுகிறேன். ஆனால் எனக்கு அது போன்ற வாய்ப்புக்கள் இதுவரைக்கும் எனக்கும் கிடைக்கவில்லை.

ஒருவேளை அது போன்ற படங்களில் நடிக்கும் அளவுக்கு நான் இன்னும் முன்னணி நடிகையாக வில்லையோ என்று எனக்கு தெரியவில்லை. இதற்குமேல் என் நடிப்பு திறமையை ஹிந்தி இயக்குனர்களிடம் எப்படி நான் வெளிக்காட்ட முடியும் என்று எனக்கு தெரியவில்லை நான் சோர்வடைந்து விட்டேன்.