Connect with us
 

News

மஞ்சுமெல் பாய்ஸ் பட நடிகரை திருமணம் செய்யும் அபர்ணா தாஸ் !

Published

on

நடிகை அபர்ணா தாஸ் மலையாளத்தில் பகத் பாசில் நடிப்பில் வெளியான Njan Prakashan என்ற படத்தின் மூலம் சினிமாவுக்கு அறிமுகமானார். அதன் பின்னர் நெல்சன் இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் வெளியான பீஸ்ட் படத்தில் சிறு வேடத்தில் நடித்ததன் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானார்.

அப்படத்தை தொடர்ந்து கவின் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான டாடா படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார் அபர்ணா தாஸ்.

இந்த நிலையில் அபர்ணா தாஸ் விரைவில் திருமணம் செய்துகொள்ளவுள்ளார் என்ற செய்தி இணையத்தில் வைரலாகி வருகிறது. சமீபத்தில் வெளியான மஞ்சுமெல் பாய்ஸ் படத்தில் நடித்திருந்த தீபக் பரம்போல் மற்றும் அபர்ணா தாஸ் இருவரும் வருகிற ஏப்ரல் மாதம் 24ம் தேதி வடக்காஞ்சேரி என்ற இடத்தில் திருமணம் நடைபெற உள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர்.