Connect with us
 

News

இறைவன் படத்துக்கு ஏ சான்றிதல் வழங்கிய சென்சர் குழு !

Published

on

வாமன்னன், என்றென்றும் புன்னகை, மனிதன் போன்ற படங்களை இயக்கிய ஜ.அஹமத் இயக்கத்தில் தற்போது உருவாகியுள்ள திரைப்படம் இறைவன். ஜெயம் ரவி மற்றும் நயன்தாரா இருவரும் தனி ஒருவன் படத்திற்கு பின்னர் இப்படத்தில் இணைந்து நடித்துள்ளனர்.

முக்கிய வேடங்களில் ராகுல் போஸ், ஆஷிஷ் வித் யார்த்தி, நரேன், சார்லி, அழகம்பெருமாள், பகவதி பெருமாள், விஜயலட்சுமி, வினோத் கிஷன் ஆகியோர் நடித்துள்ளனர்.

ஹரி கே.வினோத் ஒளிப்பதிவு செய்ய யுவன் சங்கர் ராஜா இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். சைக்கோ திரில்லர் கதையுடன் உருவாகியுள்ள இப்படம் வரும் 28-ம் தேதி திரைக்கு வருகிறது. இப்படத்திற்கு தணிக்கை குழு ‘ஏ’ சான்றிதல் வழங்கியுள்ளதாகவும் சுமார் 2 மணி நேரம் 33 நிமிடங்கள் ஓடும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.