Connect with us
 

News

இரட்டை வேடங்களில் நடிக்கும் த்ரிஷா !

Published

on

பொன்னியின் செல்வன் படத்துக்கு பின்னர் சினிமா துறையில் தனது இரண்டாம் சுற்றை ஆடி வருகிறார் நடிகை த்ரிஷா. அப்படத்திற்கு பின்னர் தி ரோடு, லியோ, படங்களில் நடித்திருந்தார் த்ரிஷா தற்போது அஜித் குமார் ஜோடியாக விடாமுயற்சி, கமல்ஹாசனுடன் தக் லைப் மற்றும் மலையாளத்தில் இரு படங்களில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் தெலுங்கு நடிகர் சிரஞ்சீவியுடன் விஸ்வாம்பரா என்ற படத்திலும் நடித்து வருகிறார். பல வருடங்களுக்கு பின்னர் தெலுங்கு படத்தில் த்ரிஷா நடிப்பதால் படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு உள்ளது.

இந்த படத்தில் த்ரிஷா இரட்டை வேடத்தில் நடிப்பதாக தெலுங்கு வட்டாரங்கள் பேசுகின்றன. இரண்டு கதாபாத்திரங்களுமே முக்கியத்துவம் வாய்ந்தவை என்றும் இது த்ரிஷாவின் திரையுலக வாழ்க்கையில் மிக முக்கியமான படமாக இருக்கும் என கூறப்படுகிறது.

கடந்த 2018-ம் ஆண்டு வெளியான மோகினி என்ற படத்தில் த்ரிஷா இரட்டை வேடத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.