Connect with us
 

News

சிலம்பரசன் நடிக்கவிருந்த படம் மீண்டும் கைவிடப்பட்டது காரணம் என்ன?

Published

on

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் ஏற்கனவே அறுந்து நடப்பு தயாரிப்பு சங்கம் என பிரிந்து உள்ளது. அந்த சங்கத்திற்க்கு இயக்குநர் பாரதிராஜா சங்கத்தின் தலைவராக உள்ளார்.

இந்நிலையில் தற்போது தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் மீண்டும் அறுந்து உடைந்து தமிழ் நாடு திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் என்ற புதிய அமைப்பை உருவாக்கி உள்ளது.

இந்த புதிய அமைப்பிற்கு இயக்குநர் டி.ராஜேந்தர் தலைமை தாங்கினார் பின்னர் ஒரு சில காரங்களுக்காக அவர் பதிவியில் இருந்து விலக அவர் மனைவி உஷா ராஜேந்தர் தலைவராக செயல் பட்டு வந்தார்.

இந்த சங்கத்தின் நிதி வளர்ச்சிக்காக சிலம்பரசன் ஒரு படம் நடித்துக்கொடுப்பார் என்று சில மாதங்களுக்கு முன்னர் சொல்லப்பட்டது. இப்படத்தை ஞானசேகர் என்பவர் இயக்குவார் என்றும் கூறப்பட்டது. தற்போது கிடைத்த தகவலின் படி இப்படத்துக்கு போதுமான மைனான்ஸ் கிடைக்காததால் இப்படம் கைவிடப்படுகிறது என்று அறிவித்துள்ளார்களாம்.