Connect with us
 

News

இம்மாதம் வெளியாகும் ஆர்யாவின் சார்பட்டா பரம்பரை ?

Published

on

இயக்குனர் பா.ரஞ்சித் தயாரிப்பில் ஆர்யா நடித்துள்ள படம் சார்பட்டா பரம்பரை. இப்படத்தில் ஆர்யாவுடன் துஷாரா, கலையரசன், பசுபதி, என பலர் நடித்துள்ளனர். 1980-ம் ஆண்டுகளில் நடக்கும் கதையாக உருவாக்கப்பட்டுள்ள இந்த படம் குத்துச்சண்டையை மையமாக கொண்டு உருவாக்கப்பட்ட திரைப்படம்.

இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. இப்படத்தின் அனைத்து பணிகளும் முடிவடைந்து வெளியீட்டுக்கு தயாரான நிலையில் கொரோனா இரண்டாம் அலையால் வெளியீட்டு பாதிக்கப்பட்டது.

இந்நிலையில் இப்படத்தை ஓடிடி தளத்தில் வெளியிட போவதாக கூறப்பட்டது. அதன் படி முன்னணி ஓடிடி நிறுவனமான அமேசான் ப்ரைம் தளத்தில் இப்படத்தை வெளியிட போவதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் ஆகஸ்ட் 15-ம் தேதி சுதந்திர தினத்தை முன்னிட்டு வெளியாகவிருப்பதாக கூறப்பட்ட நிலையில் அடுத்த மாதம் 25-ம் தேதி வெளியாகவுள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகிறது தற்போது.