Connect with us
 

Trailer

Captain – Official Tamil Trailer !

Published

on

இயக்குநர் ஷக்தி செளந்தர் ராஜன் இயக்கத்தில் Arya நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் கேப்டன்.

இயக்குநர் ஷக்தி செளந்தர் ராஜனின் முதல் படம் 2010-ம் ஆண்டு பிரசன்னா நடிப்பில் வெளியான நாணயம். அப்படத்தை தொடர்ந்து சிபிராஜ் நடிப்பில் நாய்கள் ஜாக்கிரதை அப்படத்தில் மனிதனுக்கு செல்லப்பிராணி நாய்க்கும் உண்டான காதலையும் அன்பையும் மிக நேர்த்தியாக சொல்லி வெற்றியும் கண்டார் அப்படத்தில்.

இப்படத்தை தொடர்ந்து ஜெயம் ரவியை வைத்து மிருதன் என்ற படத்தை இயக்குனார். ஹாலிவுட்டில் மட்டுமே ஹாம்பி படங்களை பார்த்து ரசித்து வந்த தமிழ் சினிமா ரசிகர்களுக்கு தமிழிலும் இப்படி படம் எடுக்கலாம் என்று ஒரு புதுவிதமான அனுபவத்தை கொடுத்தார். மிருதன் திரைப்படம் தமிழில் வெளியான முதல் ஜாம்பி திரைப்படம் இதுவாகும். இப்படத்தை தொடர்ந்து ஜெயரவியுடன் டிக் டிக் டிக் என்ற படத்தை இயக்கினார். விண்வெளியில் நடக்கும் கதையாக இப்படம் உருவாகியிருந்தது. இப்படத்தில் ஜெயம் ரவியின் மகனும் அறிமுகமாகியிருந்தார்.

அதன் பின்னர் நடிகர் Arya நடிப்பில் டெடி என்ற படத்தை இயக்கினார். இப்படத்தில் ஒரு டெடியை வைத்து மிக அழகாக அக்கதையை ஒரு த்ரில்லர் படமாகவும் குழந்தைகள் ரசிக்கும் விதமாக அந்த டெடியை கிராபிக்ஸ் மூலம் உருவாக்கி வெற்றியும் கண்டார் அதிலும்.

ஹாலிவுட் இயக்குநர் ‘கிறிஸ்டோபர் நோலன்’ தன் ஒரு ஒரு படத்துக்கும் வித்தியானமான கதைக்களத்தையும் மேக்கிங் முறையிலும் தமிழ் சினிமாவை ஹாலிவுட் தரத்துக்கு எடுத்து செல்லும் இவரின் அடுத்த படைப்புதான் ‘கேப்டன்’ திரைப்படம். இதையும் முற்றிலும் மாறுபட்ட ஒரு கதைக்களமாக உருவாக்கியுள்ளார். இப்படத்திலும் Arya ஒரு ராணுவ அதிகாரியாக நடித்துள்ளார்.

இந்த நிலையில் ‘கேப்டன்’ படத்தின் அதிகாரபூர்வ டிரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது. டிரெய்லரை பார்த்த ரசிகர்கள் இப்படமும் ஹாலிவுட் தரத்தில் உருவாகியுள்ளதாகவும் ஒரு ஏலியன்ஸ் ராணுவ அதிகாரிகளை வேட்டையாடுகிறது அந்த ஏலியன்ஸை Arya வேட்டையாடி எப்படி கொலை செய்கிறார் என்பதுதான் படத்தின் ஒட்டுமொத்தக்கதையாக இருக்கும் இப்படம் என்று தெரிகிறது.