Connect with us
 

News

தெலுங்கு ராட்சசன் இரண்டாம் பாகத்தில் நாயகனாக விஜய் சேதுபதி !

Published

on

இயக்குநர் ராம்குமார் இயக்கத்தில் விஷ்ணு விஷால், அமலா பால் மற்றும் பலர் நடிப்பில் 2018 -ம் ஆண்டு வெளிவந்து மிகப்பெரிய வெற்றி பெற்ற படம் ராட்சசன் இப்படத்தை தெலுங்கில் ரமேஷ் வர்மா இயக்க பெல்லம்கொண்டா சீனிவாஸ், அனுபாமா பரமேஸ்வரன் நடிக்க ரீமேக் செய்து ராட்சசடு என்ற பெயரில் 2019ம் ஆண்டு வெளியானது அங்கும் இப்படம் மிகப்பெரிய வெற்றி படமாக அமைந்தது.

தற்போது இதன் இரண்டாம் பாகமான ராட்சசடு 2 படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டார் இப்படத்தின் இயக்குநர் ரமேஷ் வர்மா. இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைக்கிறார்.

இப்படத்தின் கதா நாயகனாக நடிக்க விஜய்சேதுபதியிடம் இயக்குனர் ரமேஷ் வர்மா பேசியுள்ளதாக தகவல் வெளியானது. விஜய்சேதுபதிக்கு கதை பிடித்துவிட்டதாம் ஆனால் தற்போது விஜய்சேதுபதி 20க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து வருகிறார். அதனால் இப்படத்திற்கு இப்படி காட்ஷீட் கொடுப்பது என்று தெரியாமல் இருக்கிறாராம்.

ராட்சசன் படத்தின் இரண்டாம் பாகத்தை உருவாக்க திட்டமிட்டுள்ள நிலையில் தெலுங்கில் அறிவிப்பை வெளியிட்டு அதற்கான பணிகளும் நடந்து வருகிறது.