Connect with us
 

News

இனி வில்லனாக நான் நடிக்கப்போவதில்லை – விஜய்சேதுபதி !

Published

on

மக்கள் செல்வ விஜய்சேதுபதி தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருகிறார். தமிழ் சினிமாவையும் தாண்டி ஹிந்தி, தெலுங்கு மொழிகளிலும் நடித்து வருகிறார்.

ஹீரோ என்பதை தாண்டி வில்லனாகவும் பல படங்களிலும் நடித்து வருகிறார். ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான பேட்ட, விஜய் நடிப்பில் வெளியான மாஸ்டர், கமல் ஹாசனின் நடிப்பில் வெளியான விக்ரம் உள்ளிட்ட படங்களில் விஜய் சேதுபதி வில்லனாக நடித்திருந்தார்.

இப்படங்களில் விஜய்சேதுபதி நடிப்பு அனைவராலும் பாராட்ட பட்டது. இதன் காரணமாக பிற மொழி படங்களிலும் வில்லனாக நடிக்க வாய்ப்புகள் குவிந்தன. அந்த வகையில் இந்தியில் ஷாருக்கான் நடிப்பில் வெளியான ஜவான் படத்தில் வில்லனாக மிரட்டி இருப்பார்.

இந்த நிலையில் இனி வில்லனாக நடிக்க போவதில்லை என விஜய்சேதுபதி அறிவித்துள்ளார். வில்லனாக நடிப்பதில் நிறைய அழுத்தங்கள் உள்ளது என தெரிவித்துள்ளார். வில்லனாக நடிக்கும் போது ஹீரோவை விட வலுவாக தெரிய கூடாது என்று நம்மை நடிக்க வைப்பார்கள். வில்லனாக நான் நடித்த நிறைய காட்சிகளை நீக்கியும் இருக்கிறார்கள். இதனால் நான் இனி வில்லனாக நடிக்க கூடாது என முடிவு எடுத்துள்ளேன்.

இறுதியாக விஜய்சேதுபதி வில்லனாக நடித்த திரைப்படம் ஜவான். இப்படத்திற்கு பின்னர் இந்த முடிவை எடுத்துள்ளதால். இப்படத்தில்தான் இவர் கூறிய அனைத்தும் நடித்துள்ளதாக ரசிகர்கள் கூறி வருகிறார்கள்.