Connect with us
 

News

செப்டம்பரில் ஆரம்பமாகும் சிம்பு நடிக்கும் கொரோனா குமார் !

Published

on

ஈஸ்வரன் படத்தின் மூலம் உடல் எடையை குறைத்து தனது பழைய ஸ்லிம் தோற்றத்துக்கு மாறினார் சிம்பு. அதனை தொடர்ந்து வெங்கட் பிரபு இயக்கத்தில் மாநாடு படத்தில் நடித்துள்ளார். இத்திரைப்படம் மிக விரைவில் திரையில் வெளியாகவுள்ளது.

இதனை தொடர்ந்து தற்போது கெளதம் மேனன் இயக்கத்தில் வெந்து தணிந்தது காடு படத்திற்க்காக மேலும் 15 கிலோ எடையை குறைத்து அனைவஅரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தினார். இப்படத்தின் இரண்டாவது போஸ்டர் நாளை காலை 11 மணிக்கு வெளியாகிறது.

இந்நிலையில் விஜய்சேதுபதி நடிப்பில் வெளியான இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா படத்தின் இரண்டாம் பாகமாக அதன் இயக்குநர் கோகுல் கொரோனா குமார் என்ற தலைப்பில் இயக்கவிருக்கிறார்.

தற்போது விஜய்சேதுபதிக்கு போதுமான தேதிகள் ஒதுக்க முடியாத காரணத்தால் இப்படத்திலிருந்து விலகினார். இதனையடுத்து இப்படத்தில் சந்தானம் நடிப்பதாக கூறப்பட்ட நிலையில் தற்போது இப்படத்தில் நடிக்க சிம்பு ஒப்பந்தமாகியுள்ளார்.

முதல் பாகம் போலவே இப்படமும் காமெடி கலந்த கதைக்களத்தில் உருவாகயுள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு வரும் செப்டம்பர் 25-ம் தேதி துவங்கவுள்ளதாக கூறப்படுகிறது. சிம்பு தற்போது திருசெந்தூரில் கெளதம் மேனனின் இயக்கத்தில் உருவாகி வரும் வெந்து தணிந்தது காடு படத்தில் நடித்து வருகிறார்.