நடன இயக்குநராக இருந்து பின்னர் நடிகராக வலம் வரும் ஹரிகுமார் முதல் முறையாக இயக்குநராக மாறி இயக்கியுள்ள திரைப்படம் தேள்.
சென்னையிலுள்ள கோயம்பேடு சந்தையில் வட்டிக்கு பணம் வாங்கிவிட்டு அதை சரியாக கொடுக்காமல் இருக்கும் நபர்களிடம் அடித்து உதைத்து அவர்களிடம் அந்த பணத்தை வசூல் செய்யும் முரட்டுத்தனமான அடியாள் வேலை செய்து வருகிறார் நடிகரான பிரபு தேவா தாய் தந்தை இல்லாமல் அனாதையாக இருக்கும் இவருக்கு பாசம் பந்தம் தெரியாமலே இருக்கிறார்.
ஒரு நாள் திடீரென ஈஸ்வரி ராவ் நான்தான் உன் அம்மா என்று பிரபு தேவா முன் வந்து நிற்கிறார். கோபத்தில் இருக்கும் பிரபுதேவா இரண்டு கண்ணத்திலும் அறைந்து விட்டு விரட்டுகிறார். இப்படி போக ஒரு கட்டத்தில் பாசம் தாய் பாசம் என்றால் என்ன என்று உணர்கிறார். அம்மா ஈஸ்வரி ராவுடன் பாசத்தை பகிர்ந்து வாழ நினைக்கும் போதே அவரை யாரோ கடத்தி விடுகிறார்கள். அதன் பின்னர் அம்மா ஈஸ்வரி ராவை கடத்தியது யார் அவரை காப்பாற்றினாரா இல்லையா என்பதுதான் படத்தின் மீதிக்கதை.
நெஞ்சில் கொஞ்சம் கூட இரக்கமே இல்லாத வெறித்தனமான அடியாளாக வரும் பிரபுதேவா அந்த கதாப்பாதிரத்துக்கு ஏற்ற போல பொருந்தி போகிரார். எந்த ஒரு பந்த பாசமும் இவரின் நெஞ்சை உருக வைத்ததில்லை.அந்த அளவிற்கு ஒரு கரடு முரடான அடியாள்.
ஆனால் அம்மா என்று ஒருவர் வந்தவுடன் எப்படி அவர் மாறுகிறார் என்பதை மிகவும் உணர்வுபூர்வமாக காட்டியுள்ளார் இயக்குநர். எந்த அளவிற்கு ஒரு வெறித்தனமான அடியாளே அந்த அளவிற்கு பாசம் மிகுந்த ஒருவராக இரண்டாம் பாதியில் அருமையாக நடித்துள்ளார் பிரபுதேவா.
கதாநாயகியாக வரும் சம்யுக்தா ஹெக்டே படத்தில் ஒரு கதாநாயகி அதற்கு மட்டுமே இவரை பயன்படுத்தியுள்ளனர். குறிப்பாக இவரும் பிரபு தேவாவும் படத்தில் ஒரே ஒரு காட்சியில்தான் சந்திக்கிறார்கள். இவருடன் அட்டை போல சுற்றி தெரியும் யோகி பாபுவின் காமெடி நம்மை சிரிக்க வைக்கவில்லை என்பது சோகங்கள்.
அம்மா கதாப்பாத்திரத்தில் நடித்துள்ள ஈஸ்வரி ராவ் சுள்ளான், காலா படங்களுக்கு பின்னர் பார்த்தவுடனே நம் கண்ணில் கண்ணீர் வரவைக்கும் ஒரு அற்புதமான நடிப்பு.
Cinetimee
இவரின் இந்த பாசம் எந்தவொரு கல்லையும் கரைய வைத்து விடும் என்பது போல் இருக்கும் இவரின் கதாப்பாதிரம். ஆனால் ஒரு கட்டத்தில் அந்த பாசம் எதற்காக என்ற உண்மை தெரிய வரும்போது அதிர்ச்சியின் உச்சம் நமக்கு.
சென்னையிலுள்ள கோயம்பேடு சந்தையிலே ஒட்டுமொத்த படத்தையும் எடுத்து முடித்துள்ளார் இயக்குநர் ஹரிகுமார்.அம்மா – மகன் பாசத்தை மையமாக வைத்து பல படங்கள் வந்தாலும் கண்டிப்பாக இது சற்று புதுமையான திரைப்படம்.
ஆனாலும் வெறும் அம்மா – மகன் பாசம் மட்டுமே படத்தை வெற்றி பெற செய்யலாம் என்று நினைத்து எடுத்துள்ளார். அது மட்டுமே இல்லாமல் இன்னும் ஆழமான கதையும் வேண்டும் என்பது எங்களின் கருத்து.
ஒளிப்பதிவாளர் விக்னேஷ் வாசு மிக அழகாக சமாளித்து படம் பிடித்துள்ளார் ஒரு சந்தையை மட்டுமே. சத்யாவின் இசை மற்றும் பின்னணி இசை சென்டிமென்ட் காட்சிகளில் நம்மை உருக வைக்கிறது.