Connect with us
 

Reviews

Sila Nerangalil Sila Manidhargal – Movie Review !

Published

on

யக்குநர் விஷால் வெங்கட் இயக்கத்தில் அஷோக் செல்வன், மணிகண்டன், நாசர், அபி ஹாசன், ரித்திகா, ரியா, பிரவீன் பாலா, இளவரசு, கே.எஸ்.ரவிக்குமார், பானுபிரியா, அஞ்சு குரியன் ஆகியோரின் நடிப்பில் வெளிவந்திருக்கும் திரைப்படம் ‘சில நேரங்களில் சில மனிதர்கள்’

Movie Details

ஒரு விபத்து 4 பேர்களின் வாழ்க்கையில் எந்த விதத்தில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதை உணச்ச்சிகரமாக சொல்லும் திரைப்படம். நான்கு வகையான நபர்களின் வாழ்க்கை ஒரே புள்ளியில் வந்து முடியும் இதை இண்டர்லிங்க் முறையில் திரைக்கதை அமைத்து சொல்லுகிறது. இதே முறையில் பல படங்கள் தமிழில் வெளியாகியிருந்தாலும் உதாரணத்துக்கும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான ‘மாநகரம்’ படத்தை ஆகச்சிறந்த உதாரணமாக சொல்லிவிடலாம்.

அஷோக் செல்வன் காட்சிகளில் அழகாகவே நடித்துள்ளார். குறிப்பாக இவரின் கதாப்பாத்திரத்துக்கு இவருக்கும் நடிப்பதற்கு போதுமான நேரம் கிடைத்துள்ளது. மகிழ்ச்சி, துக்கம் என அனைத்திலும் ரசிக்க வைக்கும் நடிப்பு ஆனாலும் செண்டிமென்ட் காட்சிகளில் இன்னும் கொஞ்சம் அழுத்தமாக நடித்திருக்கலாமோ என்ற கேள்வி வருகிறது.

நாசர் அனைத்தையும் அறிந்த தெளிவான ஒரு மனிதராக நேர்கொண்ட பார்வையுடன் கொடுத்த கதாப்பாத்திரத்தை சிறப்பாக நடித்துள்ளார்.

அபி ஹசன் இப்படத்தில் நடிகராக நடித்திருப்பார். அவர் நடித்த படத்தின் அறிமுக விழாவில் இவரின் பேச்சு திமிராகவும் தலைகணமாகவும் இருக்கும். அந்த பேச்சு மிகவும் சர்ச்சை பேச்சாக மாறிவிடும். இன்னும் ஒரு படம் கூட நடித்து வெளியாகவில்லை அதற்குள் இப்படிப்பட்ட திமிர் பேச்சு இருக்கலாமா என்ற விவாதம் பத்திரிக்கையாளர்கள் மத்தியில் எழுகிறது.

இந்த பிரச்சனை சமீபத்தில் ‘என்ன சொல்ல போகிறாய்’ இசை வெளியீட்டு விழாவில் அஸ்வின் பேசியதை நமக்கு ஞாபகபடுத்துகிறது. ஒரு வேலை இப்படத்தில் அபி ஹசன் பேசியதை பார்த்துதான் இப்பிடி பேசினாரோ என்று தோன்றுகிறது.

இப்படத்தில் நான்கு கதாப்பாதிரங்களுக்கும் ஒரு மாற்றம் வருகிறது ஆனால் மணிகணின் நேர்த்தியான நடிப்பால் அந்த மாற்றத்தை படம் பார்க்கும் போது நம்மால் அதை உணர முடியும்.
Cinetimee

ஜெய் பீம் படத்திற்கு பின்னர் வெளிவரும் மணிகண்டனின் அடுத்த படம் உண்மையாக சொல்லப்போனால் என்ன கதாப்பாத்திரம் கொடுத்தாலும் என்னால் அதை மிக சாதாரணமாக செய்ய முடியும் என்று மீண்டும் ஒரு முறை இப்படத்தில் காட்டியுள்ளார் மணிகண்டன். இப்படத்தில் மணிகண்டனின் நடிப்பு படத்தின் முதல் பலம்.

ஒரு மனிதன் ஒரு நிலைப்பாட்டிலிருந்து இன்னோரு நிலைப்பாட்டிற்கு தன் மனதை மாற்றும் போது அந்த உணர்வுகள் எந்த மாதிரி இருக்கும் என்பதை இவரின் உணர்ச்சிகரமான நடிப்பின் மூலம் காட்டியிருப்பார்.

மனிதர்களின் உணவுகளை மையமாக கொண்டு கதை எழுதி இயக்கிருக்கும் இயக்குநர் விஷால் வெங்கட் படத்தில் நடித்திருக்கும் அனைவரையும் மிக அழகாக என்ன வேண்டுமோ படத்திற்கு அதை அவர்களிடம் வாங்கியிருக்கிறார். ஆனால் திரைக்கதையில் இன்னும் கூடுதல் கவனம் செலுத்திருக்கலாம்.

படத்தின் முதல் பாதியுடன் நம்மால் ஒன்றிபோக முடியவில்லை ஆனால் இரண்டாம் பாதியில் மிக ஈஸியாக நம்மால் ஒன்றி போக முடிகிறது. அதுவும் குறிப்பாக அனைவரும் தங்களின் தவறுகளை உணர்ந்து வெளிப்படுத்தும் காட்சிகளில் படம் பார்க்கும் நமக்கு ஒரு நெகிழ்ச்சியான தருணம்.

ரிதனின் பாடல்கள் பெரிதாக நம்மை கவரவில்லை இருந்தாலும் பின்னணி இசையில் இவரின் இசையும் ஒரு பலம். ஒளிப்பதிவாளர் மெய்யேந்திரனின் ஒளிப்பதிவு படத்தில் இருக்கும் உணர்ச்சியை நம் மனதுக்குள் பதிய வைக்கிறது.

அதே போல படத்தில் ஆரம்பத்தில் கதாபாத்திரங்களின் பிரச்சனை என்னவென்று நமக்கு காட்டப்படும். அதை இன்னும் அழுத்தமாகவும் உணர்ச்சிகரமாகவும் சொல்லி இருந்தால் படத்தின் பலம் இன்னும் அதிகமாகியிருக்கும்.


மொத்தத்தில் சில நேரங்களில் சில மனிதர்கள் கடுமையான மன உழைச்சலில் இருக்கும் அனைவருக்கும் இப்படம் கைகொடுக்கும்.