Connect with us
 

Reviews

ஜோஷ்வா – திரைவிமர்சனம் !

Published

on

Cast: Varun, Krishna & Raahei
Production: Vels Film International Ltd
Director: Gautham Vasudev Menon
Screenplay: Gautham Vasudev Menon
Cinematography: SR Kathir ISC
Editing: Anthony
Music: Karthik
Language: Tamil
Runtime: 2H 09 Mins
Release Date: 01 March 2024

 

இயக்குநர் கௌதம் மேனன் இயக்கத்தில் நடிகர் வருண் கதாநாயகான நடித்திருக்கும் திரைப்படம் ஜோஷ்வா இமை போல் காக்க.

அமெரிக்காவில் வசிக்கும் பெண் வக்கீல் சர்வதேச போதைப் பொருள் கும்பல் ஒன்றின் தலைவனுக்கு எதிராக வாதாட இருக்கிறார். அப்படி வாதாட இருக்கும் இந்த பெண் வக்கீலை காப்பாற்றும் கதாநாயகன் இதுதான் இப்படத்தின் கதை.

ஒரு போதைப் பொருள் கடத்தல்காரனை கொல்லச் சென்ற இடத்தில் படத்தின் நாயகி ராஷி-யைப் பார்த்து காதலில் விழுகிறார். காண்ட்ராக்ட் கில்லரான ஹீரோ வருண். சிறு இடைவெளிக்கு பின்னர் இருவரும் காதலில் விழுகிறார்கள். ராஹி அமெரிக்க செல்லும் போது தன்னை பற்றிய அனைத்து உண்மைகளையும் சொல்கிறார் வருண். இதனை கேட்டு கோபடையும் ராஷி இனி நமக்கு காதல் இல்லை என சொல்லிவிட்டு செல்கிறார். இதற்கு இடையில் மெக்ஸிகன் போதைப் பொருள் கடத்தல்காரனை அமெரிக்க போலீஸ் அதிகாரிகள் கைது செய்கிறது. அந்த வழக்கை வாதாட ஆஜராகிறார் ராஹி. இதனை அறிந்த அந்த கடத்தல்காரன் ராஹிகை கொலை செய்ய ஆட்களை அனுப்பிக்கிறான். இதனை அறிந்த வருண் தன் காதலியை எப்படியும் காப்பாற்ற வேண்டும் என்று களத்தில் இறங்கிறார். ராஹியை சென்னை அழைத்து வந்து தன் பாதுகாப்பு வட்டத்திற்குள் வைக்கிறார். இதையும் மீறி சில கும்பல்கள் ராஹியை கொலை செய்ய வருகிறது இதன் பின்னர் என்ன ஆனது என்பதுதான் படத்தின் மீதிக்கதை.

ஆறடி உயரம் வலிமையான தோற்றம் என சர்வதேச கான்ட்ராக்ட் கில்லர் கதாப்பாத்திரத்திற்கு மிக பொருத்தமாக உள்ளார் வருண். சண்டைக் காட்சிகளில் எல்லாம் ரிஸ்க் எடுத்து நடித்திருப்பது பார்க்கும் போது தெரிகிறது. கில்லர் என்பதால் ஒரே பாவனையில் இருந்தாலே போதும் அதை மிக சரியாகவே திரையில் காட்டியுள்ளார். முன்னாள் காதலியை காப்பாற்ற எதிரிகளை பந்தாடுகிறார். ஜோஷ்வா கதாபாத்திரத்தை ஒரு மிடுக்கான கில்லராக திரையில் காட்டியுள்ளார்.

படத்தின் நாயகியாக வரும் ராஹி அமெரிக்க வாழ் வக்கீல் ஆனாலும் வருண் பக்கத்தில் நிற்கும் போது சற்று ஜோடி பொருத்தம் பொருத்தமாக வில்லை. இருந்தாலும் தன் கதாப்பாத்திர நடிப்பில் எந்த ஒரு குறையும் இல்லாமல் நடித்துள்ளார் ராஹி.

ராஹியை கொலை செய்ய வில்லன்களால் அனுப்பப்படும் கூலிப் படையினர் படத்திலும் நாயகனுக்கும் எதிரிகள். அப்படி ஒரு கூலிப்படையின் லோக்கல் ஆளாக வருகிறார் கிருஷ்ணா. கொஞ்ச நேரம் வந்தாலும் துறு துறுதுறுப்பான நடிப்பு ரசிக்க வைக்கிறது,

இந்த ஜேம்ஸ் பாண்ட் படங்களில் இருந்த இருக்கையில் இருந்து கொண்டே கட்டளையிடும் ஒரு கதாப்பாத்திரமாக வரும் திவ்யா தர்ஷினி நாம் எல்லாம் ஆச்சர்ய படும் விதத்தில் நன்றாகவே நடித்துள்ளார்.

ஒளிப்பதிவாளர் எஸ்.ஆர்.கதிர், ஸ்டண்ட் மாஸ்டர் யன்னிக் பென், இவர்களின் கடின உழைப்பு ஒரு ஒரு காட்சிகளிலும் தெரிகிறது. பாடகர் கார்த்திக் இசையில் பாடல்கள் எல்லாமே சுமார் பின்னணி இசையும் கூட.

படத்தில் குறை என்று பார்த்தால் ஏர்போர்ட், டோல்கேட், தெரு என பல இடங்களில் கொள்ளை நடக்கிறது ஒரு போலீஸ் அதிகார் கூட வரவில்லை. இப்படிப்பட்ட காட்சிகள் எப்படி வைக்கிறார்கள் படத்தில் என்று தெரியவில்லை. ஒரு நாட்டில் போலீஸ் இல்லாமல் இருக்குமா என்ன கௌதம் மேனன் அவர்களே என்று கேட்க தோன்றுகிறது.

கொஞ்சம் காதல் நிறைய ஆக்ஷன் என பரபரப்பாக படம் இருந்தாலும் வழக்கமான கௌதம் மேனன் படமாக இல்லாமல் சிம்பிளான ஒரு கௌதம் மேனன் படமாக உள்ளது என்பது பாராட்டக்குரிய ஒன்று.